தெய்வீக தேசம் கேரளாவில் மோடியின் G. O. A. T வெற்றி



உபயம்: சாட் ஜிபிடி

G. O . A. T. என்பது GREATEST OF ALL TIME என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு சொல்லாடல் தான். அதுவும் கால் பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் சமீபத்திய இந்திய விஜயத்தில் மிகவும் பிரபலமான வார்த்தையாகப் போய் விட்டது. அந்த நேரத்தில் தான் கேரளாவில் நடந்த கார்ப்பரேஷன் (6), முனிசிபாலிட்டி (87), டிஸ்டிரிக் பஞ்சாயத்து (14), ப்ளாக் பஞ்சாயத்து (152), கிராம பஞ்சாயத்து (941) என்று மொத்தம் 1200 இடங்களுக்கு தேர்தல்கள் நடந்துள்ளன

அதில் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வண்ணம் பிஜேபி கூட்டணியான தேசிய ஜன நாயக கட்சிகள் பல இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. அதில் மிகவும் முக்கியமான வெற்றியாக பிஜேபியின்  திருவனந்தபுரம் கார்பரேஷன் வெற்றியைக் குறிப்பிடலாம். திருவனந்தபுரம் கார்பரேஷனில் மொத்த முள்ள 101 இடங்களில், பிஜேபி 50 இடங்களில் வென்றுள்ளது ஹிமாலய வெற்றி ஆகும். கம்யூனிஸ்ட் கூட்டணி வெறும் 29 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 19 இடங்களிலுமே வென்றுள்ளது



அத்துடன் பிஜேபி பாலக்காடு மற்றும் திரிபுணிதுறா ஆகிய இரண்டு முனிசிபாலிட்டியிலும் வென்றுள்ளது ஒரு பெரிய போனஸ் வெற்றியாகும். 

ஆகையால் மொத்தமுள்ள 6 கார்ப்பரேஷனில் திருவனந்தபுரம் கார்ப்பரேஷனை வென்றும், 87 முனிசிபாலிட்டிகளில் இரண்டு முனிசிபாலிட்டிகளை வென்றும் உள்ள  பிஜேபி வெற்றிகளைச் சாதரணமாகக் கணிக்க முடியாது என்பது தான் நேர்மையான அரசியல் விமர்சகர்களின் கருத்தாகும்

திருவனந்தபுரம் கார்ப்பரேஷன் கடந்த 45 ஆண்டுகளாகத் தொடர்ந்து காம்ரேட் கம்யூனிஸ்டிகளின் ஆட்சியில் இருந்துள்ளது. காங்கிரஸ் பல முறை கேரளாவில் அசம்பளி தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் அரசாங்கம் பல முறை பதவியில் இருந்தும் ஏனோ அந்த காங்கிரசால் திருவனந்தபுர கார்ப்பரேஷனை ஜெயிக்க முடியவில்லை

'நாங்கள் ஜெயித்திருக்க வேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக எங்களின் பரம எதிரி பிஜேபி திருவனந்தபுர கார்பரேஷனில் வெற்றி பெற்றுள்ளது' என்று காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் அழுது புலம்பும் அதே நேரத்தில், திருவனந்தபுரம் எம்.பி. திரு. சசி தரூரோ சோனியா - ராகுல் - பிர்யங்கா என்ற மூவர் ஹை கமாண்ட் தலைவர்களின் மனம் புண்படும்படி பிஜேபியின் கேரளாவின் வெற்றியை பாராட்டியது அவர்களின் இதயத்தையே வேல் கொண்டு பாய்ச்சியதிற்குச் சமம்

சசி தரூர் காங்கிரஸிலிருந்து நீக்கப்படுவாரா? - என்பதிலும் படு குழப்பத்தில் காங்கிரஸ் மூழ்கி உள்ளதையும் பார்க்க முடிகிறது. இந்த சமயத்தில் ராகுல் - பிரியங்காவின் தற்போதையை போராட்டத் திட்டமான 'மோடி வோட் சோர் போராட்டம்பார்லிமெண்ட் வளாகத்தில் பதாகை ஏந்தி நடக்கும் நேரத்தில் சசி தரூர் பங்கேற்க வில்லை. 'நான் வெளியூரில் இருந்தேன்; ஆதனால் பங்கேற்க முடியவில்லை' என்ற காரணத்தை காங்கிரஸ் நம்புகிறதா இல்லையா என்பது இனித் தான் தெரியவரும்

இதோ சசி தரூரின் பிஜேபி புகழுரையைப் படியுங்கள்

'பிஜேபியின் திருவனந்தபுரம் வெற்றி சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த  ஒன்றாகும். இந்த பிஜேபியின் வெற்றிக்கு நான் என் தாழ்மையான  பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன். இந்த வெற்றியை காங்கிரஸ் பெற நான் பல காலம் கடுமையையாக உழைத்தேன். 45 வருடம் தொடர்ந்து வெற்றி பெற்ற இடதுசாரி ஜன நாயக முன்னணி அணியைத் தோற்கடிக்க நான் முயன்றேன். என் ஆசை நிறைவேறினாலும், வெற்றியை பிஜேபி தட்டிக் கொண்டு போய் விட்டது. ஆனாலும் அந்த கட்சிக்கும் காங்கிரசுக்கும் இடது சாரி கட்சியின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்பதில் ஒற்றுமை உண்டு. ஆஹா, அது தான் ஜன நாயகத்தின் அற்புதமான அழகாகும். என்னுடைய எம்பி தொகுதியான திருவனந்தபுரத்தில் மக்கள் காங்கிரஸ் தலைமையில் உள்ள ஐக்கிய ஜன நாயக கூட்டணிக்கு ஓட்டளித்தாலும், பிஜேபிக்க்கு ஓட்டளித்தாலும், அதை நாம் முழுமனதுடன் ஏற்று அதை மதிக்க வேண்டும்.' 

இந்தத் தேர்தலில் காங்கிரஸின் ஐக்கிய ஜன நாயக கூட்டணியும் இடது சாரி ஜன நாயக கூட்டணியை படு தோல்வி அடையச் செய்துள்ளதையும் குறிப்பிட வேண்டும்.

 




மேலே உள்ள பட்டியலைப் பார்த்தாலே காங்கிரஸ் கூட்டணி அனைத்திலும் இடது சாரி கூட்டணியை பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற்றுள்ளது என்றாலும் அந்த வெற்றியை காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் கேரளாவில் முழு மன சந்தோஷத்துடன் கொண்டாட முடியாத சூழ்நிலையில் இருப்பதற்கு பிஜேபி கூட்டணியின் எதிர்பார்க்காத வெற்றியினால் தான். ஏனென்றால் இடது சாரியினர்கள் இந்தியா கூட்டணையில் உள்ளனர் என்பது இடது கம்யூனிஸ்ட்களுக்கும், வலது காங்கிரசுக்குமே தர்ம சங்கடமான நிலையாகத் தான் இருக்கிறது

காங்கிரஸ் கூட்டணி மொத்த முள்ள 6 கார்பரேஷன்களில் 4 கையும், மொத்த முனிசிபாலிட்டி இடங்கள் 87-ல் 54லையும், டிஸ்டிரிக் பஞ்சாயத்தில் உள்ள மொத்த 14-ல் பாதியான 7யையும், ப்ளாக் பஞ்சாயத்தில் உள்ள மொத்த 152-ல் 79யையும், கிராம பஞ்சாயத்து மொத்த இடங்களான 941-ல் 505யையும் - ஆக மொத்தம் 649 இடங்கள் (இடது சாரி கூட்டணி வெறும் 439 இடங்கள்) - அதாவது 1200 மொத்த இடங்களில் இது 54% என்ற வெற்றிக் கணக்கால் காங்கிரஸ் ஆனந்திக்கலாம்

இந்த வெற்றியை அவர்கள் அரசியல் ரீதியாக கொண்டாடி அவர்கள் கட்சியின் உழைப்பாளிகளை உற்சாகப்படுத்த வேண்டும். ஆனால் ஏனோ காங்கிரஸ் பிஜேபி வெறுப்பில் இருந்து மீளாமல் இருப்பதாலும், இந்தியா கூட்டணி என்ற உப்புக்குச் சப்பான உபயோகமில்லாத அரசியல் கூட்டணியாலும், காங்கிரஸ் எப்போதும் குழப்பத்தில் தான் உள்ளது. அதன் மற்ற இந்தியா கூட்டணி கட்சியினரும் தங்களை இந்தியா கூட்டணி என்று அடையாளம் காண விரும்புவதில்லை.

பாலக்காடு முனிசிபாலிட்டி: மொத்த 53 இடங்களில் 25 இடங்களை  பிஜேபி கைப்பற்றியுள்ளது. 

திரிபுணிதுறா முனிசிபாலிட்டி: பிஜேபி மொத்த இடங்களான 53-ல் 21 இடங்களை வென்றுள்ளது. இடது சாரிக் கட்சி 20, வலது சாரி காங்கிரஸ் 12 இடங்களில் வென்றுள்ளது

இந்த நேரத்தில் குஜாராத்தில் நடந்த அமதாபாத் கார்பரேஷன் தேர்தலை நினைவு கூறலாம். அப்போது குஜராத் மாநிலம் காங்கிரஸ் ஆட்சியில் தான் இருந்தது. ஆனால் முதன் முதலில் பிஜேபி அமதாபாத் கார்பரேஷனைக் கைப்பற்றி அதன் பிறகு குஜராத் மாநிலத்தையும் கைப்பற்றியது. அதன் பிறகு பிஜேபி தொடர்ந்து ஆட்சியில் இருக்கிறது. இந்த நிலை பிஜேபிக்கு கேரளாவிலும் நடக்கலாம். 

கேரள முதன் மந்திரி பினாராயி விஜயன் கடந்த பல மாதங்களாகவே பல ஊழல் புகார்களுக்கு உடைந்தையாக இருப்பதாக குற்றச் சாட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. அத்துடன் அவரது மாப்பிள்ளை ஒரு முஸ்லீம் சமூகத்தவர் என்பதால் பல கிருஸ்துவ ஓட்டர்கள் அவரது ஆட்சியில் நம்பிக்கை இல்லாமல் இருக்கின்றனர். 

தன்னை ஒரு தென்னை மரம் ஏறி வேலை செய்யும் ஏழை தகப்பனாரின் மகன் என்று அறிமுகப்படுத்தியவர் இப்போது தங்க நகைகள் கடத்தல், கஞ்சா கடத்தல், பினாமி பெயர்களில் நிலம் அபகரித்தல், பெண்களின் பாதுகாப்பு இல்லாமை ஆகிய பல முறைகேடுகள், அவரது சொந்த குடும்ப உறுப்பினர்களே பல முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது வெளிவந்துள்ளதால் அவரது பெயர் ரிப்பேர் ஆகி, ஆண்டி இன் கம்பன்சி என்ற அவரது ஆட்சியில் வெறுப்பும் சேர்ந்து இந்த படு தோல்விக்கு காரணங்களாகி விட்டன. 

அடுத்த 2027 நடக்க இருக்கும் தேர்தலில், இடது சாரி கூட்டணி தோல்வியைத் தழுவும் வாய்ப்பு அதிகம் என்று தான் கருதத் தோன்றுகிறது. 

பிஜேபியின் கூட்டணியால் வரும் கேரளா சட்டமன்ற தேர்தல் மூன்று கூட்டணிக் கட்சிகளின் போட்டியாக இருக்கும் என்று தெரிகிறது. பிஜேபியும் வரும் சட்டசபைத் தேர்தலில் பல இடங்களில் வெற்றி பெற்று அது தொங்கு சட்ட சபையாக மாறும் நிலையும் ஏற்படலாம்.

கேரள மக்களின் ஆதரவும், கடவுள் அருளும் இருப்பின்  பிஜேபியே கேரள சட்ட சபையில் அதிக இடங்களில் வென்று ஆட்சிக் கட்டிலில் அமரவும் வாய்ப்பு அமையலாம். 

திரிபுரா - ஒடிசா ஆகிய இரண்டு மாநிலங்களில் பிஜேபி ஆட்சிக்கு வரும் என்று முன்பு ஒருவரும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் அது நடந்துள்ளது. மேற்கு வங்காள இந் நாள் டிடி மம்தா தன் கட்சியின் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முயன்றாலும், பிஜேபி அங்கும் ஆட்சி அமைக்கும் நிலையும் ஏற்பட வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 

பிஹாரின் பிஜேபியின் கோட் வெற்றி பல எதிர்கட்சிகளை ஆட்டம் காண வைத்துள்ளது.

கர்நாடகாவில் இப்போது தேர்தல் நடந்தால் அங்கு காங்கிரஸ் தோற்பதும், பிஜேபி ஜெயிப்பதும் உறுதி. காங்கிரசின் ஹிமாசலப் பிரதேச ஆட்சியும் வெகு சீக்கிரம் முடிவுக்கு வந்து அங்கும் பிஜேபி காவிக் கொடி பறக்கும் நிலைதான் காண்கிறோம். 

கர்நாடக துணை முதன் மந்திரி சிவ குமார் 'வரும் 2029 லோக் சபா தேர்தலில் ராகுல் தான் பிரதம மந்திரி' என்று வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தும் அவருக்கு ஏனோ வாக்கு கொடுத்த படி முதன் மந்திரி பதவியும் இது நாள் வரை கிடைத்த பாடில்லை. சிற்றுண்டி உண்டல், டெல்லி பயணம் என்று இது ஒரு தீராத தொடர்கதையாகவே இழுத்தடித்து, இந்த அரசியல் நாடகமே அரசாங்கத்தை ஒழுங்காக நடத்தவிடாமல் இருக்கும் அவல நிலையை மக்கள் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அது பிஜேபிக்கு ஆதரவான ஓட்டுக்களை அதிகரிக்கும் என்றும் நம்பலாம். 

தெலுங்கானா முதன் மந்திரி இன்னும் ஒரு படி மேலே போய் 'காங்கிரஸ் என்றால் முஸ்லீம்; முஸ்லீம் என்றால் காங்கிரஸ்' என்று மொழிந்ததுடன், ஹிந்துக் கடவுள்களை மிகவும் கீழ்த்தரமாகப் பேசி உள்ளார். அவைகளை இங்கு பதிவு செய்ய வேண்டாம் என்று தவிர்த்துள்ளோம். ஆனால் ஹிந்துக்கள் விழித்து விட்டார்கள்; இனி முஸ்லீம் வாக்கு வங்கி எந்த ஒரு கட்சிக்கும் முழுப்பயனும் கிட்டாது என்று தான் நினைகிறோம். 

பிஜேபியும் வெற்றிப் போதையில் விழாமல், மக்கள் சேவையிலேயே ஒவ்வொரு வெற்றி பெற்றவரகளும் ஈடுபட்டு, தங்கள் முழு நேரத்தையும் வாழ்வையும் அர்ப்பணிக்க வேண்டும். அதற்கு அன்னை பாரத தேவி அருள் கிட்ட வாய்ப்பை மனதார வேண்டுகிறது.

 



Comments

Popular posts from this blog

வள்ளுவம் 4 - குலம்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017