Posts

Showing posts with the label இந்திய மூவர்ணக் கொடி

நெஞ்சு பொறுக்குதில்லையே!

Image
யாராலேயும் 15- ம் தேதி ஆகஸ்ட் மாதம் 1947 நாளை மறக்க முடியுமா ? இந்தியா சுதந்திரம் பெற்று நமது தேசியக்கொடி செங்கோட்டையில் ஏற்றப்பட்டு , நாடு முழுதும் அந்தக் கொடி பறக்க விடப்பட்டு , நாடு சுதந்திரம் அடைந்த நன்நாள் அன்றோ! கல்கத்தாதான் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் முதல் தலைநகரம் என்பது சரித்திரம் சொல்லும் உ ண்மை. ஆனால் , இப்பொழுது வேறு ஒரு உ ண்மையையும் சொல்லப் போகிறேன். அது தான் இது: கொல்கத்தாவில் மெட்டியாபிரஸ் இமாம்பரா என்ற புகழ் பெற்ற கட்டிடத்தில் யூனியன் ஜாக் என்ற ஆங்கிலேயரின் கொடி இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் பறந்தது. அந்த ஆங்கிலேயரின் கொடி இந்தியா சுதங்திரம் பெற்றும் 27 வருடங்கள் பறந்த பிறகு , 26 ஜனவரி 1975 அன்று தான் அகற்றப்பட்டு , அந்தக் கட்டிடத்தில் நமது மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டு பறக்க விடப்பட்டிருக்கிறது. இதற்கு என்ன சாட்சி என்று நீங்கள் கேட்கலாம் ? காங்கிரஸ் ஆட்சிதானே - அதுவும் காங்கிரசில் மிகவும் செல்வாக்குள்ளவர்களான திருவாளர்கள் பி.சி. ராய் , பி.சி.சென் , அஜாய் முகர்ஜி , பி.சி.கோஷ் போன்றோர்கள் தானே அங்கு முதல் மந்திரி பதவியில் இருந்திருக்கின்றனர்....