Posts

Showing posts with the label 89-வது வயதில் காலமான சோமநாத் சாட்டர்ஜி – 13-08-2018

89-வது வயதில் காலமான சோமநாத் சாட்டர்ஜி – 13-08-2018

Image
பிறப்பு: 25-07-1929 – அஸ்ஸாமில் உள்ள டெஸ்பூரின் பிறந்தார். அவர் சட்டப்படிப்பில் முதுகலைப் பட்டதாரி. அரசியலில் ஈடுபடுவதற்கு முன் அவர் கல்கத்தா உயர் நீதி மன்றத்தில் அட்வகேட்டாகப் பணியாற்றினார். ஜமீந்தார் பரம்பரையில் வந்த ரேணு சவுத்திரியை 1950-ம் வருடம் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள். அவரது மகனும் கல்கத்தா உயர் நீதி மன்றத்தின் அட்வகேட். 10 முறை எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டவர். 2004-ம் ஆண்டு 14வது லோக் சபாவில் அவர் சபாநாயகராக ஒருமனதாகத் தேர்வானார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு அளித்த ஆதரவை ஜூலை 2008-ம் வருடம் சி.பி.ஐ.எம். திரும்பப் பெற்றது. ஆனால், வலது சாரி பி.ஜே.பி.யும் எதிர்ப்பதால் கட்சியின் உத்திரவையும் மீறி காங்கிரசுக்கு ஆதரவாக ஓட்டளித்தார். காங்கிரஸ் ஆட்சியும் பிழைத்தது. ஆனால், சோமாநாதை கட்சியை விட்டு 23-07-2008 அன்று விலக்கியது.  ‘சபாநாயகராக அரசியல் சாதனத்தின் படி சோமநாத் செயல்பட்டதாகச் சொன்னாலும், கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டம் அதை விட மேலானது’ என்று வங்காள கட்சியின் செயலாளர் பிமன் போஸ் அறிக்கை விட்டார். இது சோமநாத்தை ...