அரசியல் சட்டத்தில் உள்ள செக்குலர் வார்த்தையின் சரித்திரம்
1977 வருடம் . இந்திராவின் எமர்ஜென்சிக்குப் பிறகு , மொரார்ஜி பிரதம மந்திரியாக ஜனதா கட்சியின் ஆட்சி மத்தியில் ஒரு அரசியல் சட்ட திருத்த மசோதா கொண்டு வந்தது . அதில் ‘ செக்குலர் ’ என்ற வார்த்தைக்கு விளக்கம் அளிக்கப்பட்டது . ‘ செக்குலர் என்பது அனைத்து மதத்தினருக்கும் சம அந்தஸ்து ’ என்ற விளக்கம் உள்ள அந்த மசோதா லோக் சபாவில் ஜனதா கட்சி பெரும்பான்மை பெற்ற காரணத்தால் நிறைவேறியது . ஆனால் ராஜ்ய சபாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை உள்ளதால் , அந்த மசோதா தோல்வி அடைந்தது . ஏன் இந்த விளக்கம் காங்கிரசிற்கு ஏற்புடையதில்லை என்பது அது சிறுபான்மை இன மதத்தவர்களான முஸ்லீம்கள் - கிருஸ்துவர்கள் ஆகியவர்களுக்கு தனிச் சலுகைகளை அளிப்பதில் இது தடையாக இருக்கும் என்ற பயம் தான் காரணம் . ஆனால் , சோனிய காந்தி ஜூன் 9, 2007 அன்று அவர் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் சேர்பெர்சன் என்ற ஹோதாவில் ஹாக்கில் உள்ள நெக்ஸஸ் இன்ஸ்டிடூடில் பிரசங்கம் செய்யும் போது சொன்னார் : ‘ இந்தியா ஒரு செக்குலர் நாடு . செக்குலர் என்ற அந்தச் சொல் - அனைத்து மதங்களுக்கும் சம அந்தஸ்து என்பதைக் குறிக்கும் ’ இது தான் காங்கிரசின் பேச்சிற்...