ரக்ஷா பந்தன் 09 - 08 - 2025
ரக்ஷா பந்தன் என்பது சமஸ்கிருத வார்த்தைகளான ' ரக்ஷா ' ( பாதுகாப்பு) மற்றும் ' பந்தன் ' ( பிணைப்பு) ஆகியவற்றிலிருந்து உருவானதாகும். இதன் பொருள் "பாதுகாப்புப் பிணைப்பு" ஆகும். இந்த இந்துப் பண்டிகை , சகோதரிக்கும் சகோதரனுக்கும் இடையிலான அன்பையும் , சகோதரிக்கும் தனது சகோதரனுக்கும் தன் பாதுகாப்பிற்கும் அளிக்கும் உறுதிமொழியையும் குறிக்கிறது. அந்த உறுதி மொழியை வெளிப்படுத்தும் விதமாக சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் மணிக்கட்டில் ' ராக்கி ' எனப்படும் புனித நூலைக் கட்டி , அவர்களின் நீண்ட ஆயுளையும் , மகிழ்ச்சியையும் , வளத்தையும் வேண்டிப் பிரார்த்தனை செய்வார்கள். இதற்குப் பதிலாக , சகோதரர்கள் தங்கள் சகோதரிகளை எப்போதும் பாதுகாப்பதாக உறுதியளித்து , அவர்களுக்குப் பரிசுகளை வழங்குவார்கள். ரக்ஷா பந்தன் பண்டிகை வட இந்தியாவில் மிகவும் பிரபலமானது என்றாலும் , தற்போது இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. ரக் க்ஷாபந்தன் பண்டிகை உருவான கதை கிருஷ்ணர் - திரெளபதி சகோதர உணர்வு: போர்க்களத்தில் கிருஷ்ணருக்கு மணிக்கட்டில் ஏற்பட்ட காயத்தைப் பார்த்த திரெளபதி தன் புடவையின் ஒரு...