Posts

Showing posts with the label ஜெயந்திநாதன் சிறுகதை - அவன் எழுத்தாளன்

அவன் ஒரு எழுத்தாளன் - எழுதியவர்: ஜெயந்திநாதன்

சிறுகதை: இரண்டு பேர்கள் மெரினா கடற்கரை ரோடு வழியே அருகருகே நடந்து போய்க்கொண்டிருந்தனர். "நீங்கள் யார்?" என்று ஒருவர் கேட்டார். "நான் ஒரு எழுத்தாளன்" என்று ஒரு பெருமிதத்துடன் மற்றவன் பதிலளித்தான். "உங்கள் கதைகள் எந்த எந்தப் பத்திரிகைகளிலெல்லாம் வந்திருக்கின்றன?" "இதில் தான் மனிதன் தவறிவிடுகின்றான். பத்திரிகைகளில் கதைகள் வந்தால்தான் அவன் எழுத்தாளனா? மிகச் சாதாரணமான கதைகளும் பத்திரிகைகளில் இடம் பெறும் பொழுது, அவர்களெல்லாம் எழுத்தாளராகிவிட முடியுமா? என்னுடைய கதைகளை அவர்கள் பிரசுரிக்கவில்லை என்றால், என் கதையின் மதிப்பு ஒரு போதும் குறையாது. நான் ஒரு எழுத்தாளன்" என்று மிகுந்த உத்வேகத்துடன் சொன்னான். "ஆம். நீங்கள் சொல்வதிலும் உண்மையிருக்கிறது" என்று பதிலளித்தார். நமது எழுத்தாளன் உடனே, "கைகொடும். என்னை நீர் சரியாகப் புரிந்து கொள்ளும் சக்தி பெற்றிருக்கின்றீர். நீர் ஓர் உயர்ந்த ரஸிகர்" என்று அவரது கைகளைப் பிடித்துக் குலுக்கினான். அவருக்கு மிகுந்த சந்தோஷம் உண்டாயிற்று. எழுத்தாளனுக்கு உள்ளமெல்லாம் பூரித்தது. "உயர்தரக் கதைகளை...