டெல்லி கலவரம்
53 உயிர்கள் பலி – அதில் பலரது உடம்புகளில் நாட்டு துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து உயிர் இழப்பு. பல உடல்கள் சாக்கடையிலிருந்து மிட்பு. 250 பேர்களுக்கு மேல் காயம். ஷாஹீன் பாக் – முஸ்லீம் பெண்கள் கடந்த டிசம்பர் 14-லிருந்து தெருவை அடைத்து எந்தவிதமான வாகனங்களோ, மனிதர்களோ செல்ல முடியாமல் ‘குடியுரிமைத் திருத்த சட்டத்தை’ எதிர்த்து போராடிய இடத்திலிருந்து சமீபத்தில் மூன்று உடல்கள் மூன்று வெவ்வோரு இடங்களிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் தலையிட்டும் இந்த பொது வீதியை அடைத்துப் போராடுவதைத் தடுக்க முடியாமல் மார்ச் 23-வரை காலக்கெடு விதித்துள்ளது. ‘போராடுங்கள் ஆனால் இங்கே வேண்டாம். வேறு இடத்திற்குச் செல்லுங்கள்’ என்று சுப்ரீம் கோர்ட் ஒரு பிச்சைக்காரனைப் போல் கெஞ்சியதை இப்போது தான் இந்தியா காணும் பாக்கியம் பெற்றுள்ளது. வாழ்க சுப்ரீம் கோர்ட்டின் சகிப்புத் தன்மையும், பாரபட்சமான அணுகுமுறையும். முஸ்லீம்களுக்குச் சொந்தமான கட்டிடங்களில் கலவரம் உண்டாக்கும் கற்கள், பெட்ரோல் குண்டுகள், வெடிகுண்டுகள், க...