Posts

Showing posts with the label அர்க்க பத்திரமும்

அர்க்க பத்திரமும், ரத சப்தமியும் – செவ்வாய்க் கிழமை -12-02-2019

Image
அர்க்கன் என்றால் சூரியன். பத்திரம் என்றால் இலை. சூரிய இலை என்பது எருக்க இலையைக் குறிக்கும். ரத சப்தமி அல்லது மக சப்தமி என்றால் சூரியனுடைய ரதம் மாசி மகதத்தின் சுக்ல பக்ஷ சப்தமியில் (சப்தமி என்றால் ஏழாவது) பிரவேசிப்பதைக் குறிக்கும். ஏழு குதிரைகள் (இது சூரிய கதிர்களின் ஏழு நிறங்களைக் குறிக்கும்) பூட்டிய சூர்ய பகவானுடைய ரதம் தெற்கே மகர ரேகையிலிருந்து வடக்கே உள்ள கடக ரேகையை நோக்கி பயணிக்கும் ஆறுமாத காலமான உத்தராயணத்தின் ஆரம்பம் ரத சப்தமி ஆகும்.   சூரிய பகவான் ரிஷி காஷ்யபருக்கும், அவரது தர்ம பத்தினி அதிதிக்கும் பிறந்தவர். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அந்தப் புண்ணியவதியை ஒரு பிராமணன் தனக்குப் பிட்சை அளிக்கத் தாமதித்ததால், அதிதியின் வளரும் சிசு இறக்கும் என்று சாபம் கொடுத்து விட்டார். இதை காஷ்யபருக்குத் தெரிவிக்க, அவரோ ‘கவலைப் பட வேண்டாம். பிரகாசமான ஒளியுடன் கூடிய ஒரு மகன் பிறப்பான்’ என்று தமது பத்தினியிடம் தெரிவித்ததாகப் புராணம் சொல்கிறது. அந்த மகன் தான் உலகத்திற்கெல்லாம் ஒளி கொடுக்கும் தீப்பிழம்புப் பிரகாசமான சூரிய பகவானாவார். சூரியன் பாவத்தைப் பொசுக்கும் சக்தி படைத்தவர். “ரத ...