Posts

Showing posts with the label தீரர் ஆர்ய கே. பாஷ்யம்

தீரர் ஆர்ய கே. பாஷ்யம்

Image
சைமன் கமிஷனை எதிர்த்துப் போராடியதால் ஆர்ய பாஷ்யம் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டார். தேச விடுதலைக்காகப் பல முறை சிறைசென்றவர். சென்னை கவர்னரைக் கொல்ல முயன்றதற்காகவும் தண்டிக்கப்பட்டவர். அன்னியத் துணிகளை எரிக்கும் போராட்டத்திலும் முன்னின்று செயல்பட்டவர்.  ஜாலியன் வாலாபாத் படுகொலை அவரை மிகவும் பாதித்தது. 25 வயதே ஆன பாஷ்யம் 26-ம் தேதி ஜனவரி, 1932 அன்று காலை 2 மணிக்கு தானே உருவாக்கிய மூவர்ணக் கொடியை இடுப்பிலே கட்டிக்கொண்டு, 148 அடி உயரமுள்ள செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள கொடிக் கம்பத்தில் ஏறினார். அந்தக் கம்பத்தின் உச்சியில் தமது இடுப்பில் கட்டியிருந்த மூவர்ணக் கொடியினை ஏற்றினார். அவரைப் போலீஸ் பிடித்துத் தண்டித்தனர். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு தனக்கு அளிக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர்களுக்கான உதவித் தொகையைப் பெற மறுத்து விட்டார். அவர் சிற்பியும், ஓவியரருமாவார். அவர் தீட்டிய மஹாகவி பாரதியின் ஓவியம் தான் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். மஹாத்மா கந்தியின் ஓவியத்தையும் அவர் வரைந்துள்ளார். சென்னை ரிப்பன் கட்டிடத்தில் உள்ள சத்திய மூர்த்தியின் சிலை பாஷ்யம் உருவாக்கியதாகும். அவர் ...