Posts

Showing posts with the label தவம்

தவம்

தவம் துறவறத்தின் மூலமே தவத்தில் தான் இருக்கிறது. தவம் என்றால் என்ன? மனத்தை அடக்குதல்தான் தவம். மனத்தை எப்பொழுதும் தாக்கும் சக்திபெற்றவைகள் தான் ஐம்பொறிகளான கண்கள், காதுகள், மூக்கு, வாய், ஸ்பரிசம் ஆகியவைகள். அப்படி என்றால் ஐம்பொறிகளையும் அடக்குவது எவ்வாறு? பலவிதமான விரதங்களை மேற்கொள்ள வேண்டும். உண்டி சுருக்கல், வெயில்-மழை-பனி-நீர் இவைகளில் நின்று உடலை வருத்தி, அதனால் தம் உயிர்க்கு வரும் துன்பங்களைப் பொறுத்து, பிற உயிர்களைக் காத்து வாழ்வதன் மூலம் ஐம்பொறிகளை அடக்க முடியும். இந்தச் செயல்களால் மனமும் அடங்கி, தவத்தின் முழுப் பலனும் கிட்டும். பார்வதி தேவியே தவம் செய்துதான், பரமசிவனைப் பர்த்தாவாக அடைந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. ஆகையால், தவம் துறவிகளின் திறவு கோளாகும். வள்ளுவரின் பார்வையில், தவம் என்பதின் குணாதிசயங்கள் யாவை? என்பதைப் பார்ப்போம். எல்லோரும் துறவிகளாக முடியாது. முற்பிறவியில் தவம் செய்தவர்களே இப்பிறவியில் துறவிகளாக முடியும். ஆகையால், அறிவுடையோர்கள் முடிந்தமட்டில் மனிதப் பிறவி எடுத்தவுடனேயே முடிந்த மட்டும் தவம் செய்ய முயல வேண்டும்.தனக்கு ஏற்படும் துன்பத்தைப் பொறுத்துக்...