Posts

Showing posts with the label மஹாபாரதத்தின் ஒரு துளி

மஹாபாரதத்தின் ஒரு துளி

Image
மஹாபாரதத்தின் ஒரு துளி: தெய்வ நம்பிக்கை - மனித முயற்சி இரண்டில் எது சிறந்தது ? யுதிஷ்டிரர் பீஷ்மரிடம் ' தெய்வ நம்பிக்கை - மனித முயற்சி ஆகிய இரண்டில் எது சிறந்தது ?' என்று கேட்கிறார். அதற்குப் பதிலாக வஸிஷ்டருக்கும் பிரம்ம தேவருக்கும் நடந்த உரையாடலை பீஷ்மர் குறிப்பிடுகிறார் .  அந்த உரையாடலின் மூலக் கருத்தை இங்கு எழுதுகிறேன் .  எஸ் . சங்கரன் .   வசிஸ்டர் : பிரம்ம தேவரே ! தெய்வநம்பிக்கை அல்லது ஊழ்வினை ஒரு பக்கம் ; மனித முயற்சி மறுபக்கம் . இதில் எது சிறந்தது ?  பிரம்ம தேவர் : விதையிலிருந்து செடி முளைக்கிறது . செடியிலிருந்து இலையுண்டாகிறது . இலையிலிருந்து காம்பு உண்டாகிறது . காம்பிலிருந்து கிளை உண்டாகிறது . கிளையிலிருந்து மலர் உண்டாகிறது . மலரிலிருந்து கனி உண்டாகிறது . கனியிலிருந்து விதை உண்டாகிறது . மீண்டும் விதையிலிருந்து உற்பத்தி தொடர்கிறது . விதை இல்லாமல் ஒன்றும் உண்டாவதில்லை .  அது மட்டுமல்ல. விதை விதைப்பவன் நிலத்தில்   எவ்வகையான விதையை விதைக்கிறானோ அந்த விதையின் குணத்திற்கு ஏற்ற பலனை ...