தேசிய பத்திரிகை நாள் – 16-11-2017
துக்ளப் பத்திரிகையில் அதன் ஆசிரியர் எஸ். குருமூர்த்தி – ‘பத்திரிகை உலகில் நடுநிலை, சுதந்திரம், துணிச்சல் – எது முக்கியம்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியதைப் படித்ததின் தாக்கத்தில் இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது. ஒரு பத்திரிகைக்கு சுதந்திரமான சிந்தனை அவசியம். அந்த சிந்தனை கட்டுரையாக வெளியிடுவதற்கு துணிச்சல் அதைவிட அவசியம். இதை விடுத்து, நடுநிலை என்று முடிவெடுத்து பிரச்சனையிலிருந்து ஒதுங்கி இருப்பது மிகவும் கேவலமாகும். இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் அதிபர் ராம்நாத் கோயங்கா காங்கிரஸ் அபிமானியாக இருந்த சமயம். இருப்பினும், அவர் சுதந்திரமான சிந்தனையுடன், துணிச்சலாக தம் கருத்தை எந்த உயர் பதவியில் இருப்பவர்களிடம் நேரடியாக எந்தவிதமான தயக்கமோ, ஒளிவு மறைவோ இல்லாமல் வெளியிடும் தீரமும் கொண்டவர். 1969-ல் காங்கிரஸ் கட்சியை இந்திரா காந்தி உடைத்த போது, அவரைச் சந்தித்து, ‘நீங்கள் செய்தது மாபெரும் தவறு’ என்று கோயங்கா கூறியதற்கு, இந்திரா காந்தி அவரிடம் ‘நீங்கள் என்னுடைய நண்பரா, எதிரியா?’ என்றதற்கு, ‘அதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்’ என்று பதில் உரைத்துள்ளார். இது தான் சுதந்திரமான ச...