Posts

Showing posts with the label மதச் சார்பின்மையும்

மோடியின் மதச் சின்ன அடையாளமும், மதச் சார்பின்மையும்

Image
  ஆர் . எஸ் . எஸ் . கொள்கையில் நம்பிக்கை கொண்டவர் திரு . எஸ் . குருமூர்த்தி . அவர் ஒரு ஆடிட்டர் . திறமைசாலி . அத்துடன் பயமில்லாமல் தம் தரப்பு நியாயத்தை மிகவும் தெளிவாகச் சொல்லும் ஆற்றல் மிக்கவர் . அவரது கருத்துக்களை ஒப்புக் கொள்ளாதவர்கள் கூட அவர் கூற்றின் ஆழத்தையும் , தெளிவையும் உவந்து பாராட்டி இருக்கிறார்கள் . அம்பானி குடும்பத்தில் குழப்பம் வந்த போது , அவரை நாடும் போது , ‘ உங்களுக்கு பணம் பண்ணுவது மட்டுமே தெரியும் . நாட்டின் சட்ட திட்டங்களை மதிக்காதவர்களாயிற்றே நீங்கள் . இப்படிப்பட்ட உங்களின் குடும்ப விவகாரங்களில் நான் என்ன செய்ய முடியும் ?’ என்று முதலில் சொன்னாலும் , அவர் அவர்களுக்கு உதவிகரமாக இருந்தார் . காஞ்சி பெரியவாளிடம் தீராத பக்தி கொண்ட பக்தர் . அவரது கட்டுரை சமீபத்தில் “ தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் ” நாளிதழில் ‘ மோடியின் மதச் சின்ன அடையாளமும் , மதச் சார்பின்மையும் ’ என்ற தலைப்பில் வெளி வந்துள்ளது . ( Link ).   அந்த ஆங்கிலக் கட்டுரையை அடிப்படியாக வைத்து , அதில் தெரிவித்துள்ள மையக் கருத்தை இங்கு என் பாணியில் பதிவு செய்ய விழைகிறேன் . முழு ஆங்கிலக் கட்டுரையை , மேலே உள்...