மோடி - புதின் ட்ரம்பட் வாத்திய இசையில் டிரம்பின் டிரம்பட் உடைந்த அவலம்
டிரம்ப் தமது டிவிட்டரில் ஒரே புலம்பலாக அழுதுத் தள்ளுகிறார். அவரது டிரம்பட் வாத்தியம் ஒலி இழந்து ஒடிந்து விட்டதாகவே கருத வேண்டி உள்ளது.
இதில் கவனிக்க வேண்டிய ஒரு பெரிய விஷயம் என்ன வென்றால் மோடி - டிரம்ப் நட்பு வலுவாக இருந்து, அவரும் மோடியின் ஆதரவினாலும் யு.எஸ். ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு, தனக்கு நோபல் பரிசு கிடைக்க மோடியை தம் பெயரை பரிந்துரை செய்ய வேண்டி உள்ளார். ஆனால் அதற்கு மோடி செவி சாய்க்க வில்லை. உக்ரைன் போரில் தமக்கு ஆதரவாகவும், ரஷ்யாவிற்கு எதிராகவும் செயல்பட் வேண்டினார். அதுவும் மோடியிடம் எடுபடவில்லை.
அதன் பிறகு
டாரிப் என்ற பிரம்மாஸ்வரத்தை எடுத்து மோடி மேல் வீசிவேன் என்று சொன்னதுடன், 50%
அளவிற்கு இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் சரக்குகளுக்கு டிரம்ப்
வரி விதித்தார். அதற்கு எதிர் நடவடிக்கையாக மோடி அரசும் அமெரிக்கப் பொருட்களுக்கு
வரி விதிக்கப்பட்டது. இந்த ஏட்டிக்குப் போட்டி நடக்கும் நேரத்திலேயே டிரம்ப்
மோடியுடன் தொலைபேசியில் பேச முயன்றும் மோடி அதற்கு இடம் கொடுக்க வில்லை.
ஒரு வல்லரசாக தன்னை இணம் காணும் அமெரிக்காவின் ஜனாதிபதி இந்திய பிரதமருக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதால் மோடியின் செல்வாக்கு உயர, டிரம்பின் செல்வாக்கு சரிந்து கொண்டே போகிறது. இன்னும் ஒரு படி மேலே போய் மோடியை அமெரிக்காவுக்கு வர வேண்டியும், அதுவும் மோடியால் இப்போது ஏற்கப்பட வில்லை.
இந்த சூழ்நிலையில் தான் புதின் - மோடி சந்திப்பு டெல்லியில் மிகவும் கோலாகலமாக நடந்துள்ளது.
புதினின் இந்த இந்திய விஜயத்தை வர்ணாசியில் ஆரத்தி காட்டி வரவேற்றுள்ளனர்.
அது
மட்டுமல்ல; புதினை டெல்லி ஏர்ப்போர்டுக்கே சென்று வரவேற்றுள்ளார் மோடி. இது பிரம மந்திரியின் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு
எதிரானதாக இருப்பினும் புதினிடம் தமக்குள்ள தனிப்பட்ட நட்பின் வெளிப்பாடாக இதைச்
செய்துள்ளார் மோடி.
ரஷ்ய மொழியில்
மொழிபெயர்க்கப்பட்ட பகவத் கீதையை புதினுக்குப் பரிசளித்துள்ளார் மோடி. கீதை உலகத்திற்கே உபதேசித்த ஞான உரை என்பதை புதினுக்கு
உணர்த்தவே இந்தப் புத்தகப் பரிசாகும்.
புதின் இந்தியா வருகை 23-வது ஆண்டு அதிகார பூர்வ கூட்டத்திற்காகும்.
பிரதமர் தாம் வசிக்கும் அரசு மாளிகை 7, லோக் கண்யான் மார்க்கிற்கே புதினை விமான நிலையிலிருந்து தனது காரில் சேர்ந்தே பயணித்து அழைத்து மிகவும் தடபுடலான விருந்து வைத்து தமது நண்பரிடம் உள்ள நட்பை வெளிப்படுத்தினார்
அந்த
சந்திப்பின் போது மோடி அவர்களின் நட்பு, இரு நாடுகளின் வணிகம் மற்றும்
ஒத்துழைப்பு, புது ஒப்பந்தங்கள் ஆகியவைகள் குறித்து பேசப்பட்டதாகச்
சொல்லப்படுகிறது.
வர்த்தகம், வணிகம் ஆகிய ஒப்பந்தங்களை விட இந்திய - ரஷ்யாவின் உறவை வலுப்படுத்தும் சக்தி அந்த இரு
நாடுகளுகிடையே உள்ள கலாச்சார மேம்பாடு இரு நாட்டு மக்களும் உறவு கொள்வதில் தான்
இருக்கிறது. அதன் ஒரு
வெளிப்பாடாக, ரஷ்யாவில்
இன்னும் இரண்டு புதிய இந்திய வெளியுறவு அலுவலகம் திறக்க உள்ளது. அத்துடன் இந்தியாவிலிருந்து புத்தரின் புனிதச்
சின்னங்கள் ரஷ்யாவிற்கு வரவிருக்கின்றன. அத்துடன் கல்வி, தொழில்
துறைத் திறமைகளை வளர்த்தல் - பயிற்றுவித்தல்
ஆகிய துறைகளிலும் இரு நாடுகளும் இணைந்து செயல்படும்.
அத்துடன் 30 நாட்கள் இ-சுற்றுலா விசா இந்தியாவிற்கு வர ரஷ்யர்களுக்கு ரஷ்ய தரப்பில் அளிப்பது போல வழங்கப்படும் என்ற ஒப்பந்தமும் கை எழுத்தாகியது. அது மட்டுமல்ல. குழுவாக வரும் ரஷ்யர்களுக்கும் இந்த விசா அளிக்கப்படும் என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டது.
மோடி உக்கிரைன் போரை நிறுத்த ஒரு நிரந்தரமான சமாதான முடிவை எட்ட புதினிடம் வலியுறுத்தினார். தீவிரவாதம் அறவே ஒழிய இரு நாட்டுத் தலைவர்களும் ஒருங்கிணைந்து செயல்பட ஒப்புக்கொண்டனர்.
இந்தியா - ரஷ்யா வர்த்தகங்கள் மேம்பட இரு நாட்டுத் தலைவர்களும் பாரத் மண்டபத்தில் இரு நாட்டு வர்த்தகத் தலைவர்களுடன் உரையாற்றினர்.
அப்போது அவர்களிடம் பொருளாத கூட்டுறவு ஒப்பந்தங்கள் அனைத்தும் 2030 ஆண்டு வரை நீடிக்கும் என்பது தெரிவிக்கப்பட்டது.
இந்த சந்திப்பில்
ரஷ்ய எண்ணெய் கொள் முதல் குறித்த விவரங்கள்:
1. புடின் டெல்லியில் மோடியுடன் நடந்த பேச்சு வார்த்தையில், இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரத்திற்கு “ஏதும் தடையில்லாமல்” எரிவாயு/எனர்ஜி வழங்க தயாராக இருப்பதாக கூறினார் — இது ரஷ்ய ஆயிலை இந்தியா தொடர்ந்தும் வாங்க வழிவகிக்கும் செயல்.
2. மோடி ரஷ்யா-இந்தியா உறவின் முக்கியத்துவத்தை விவரிக்கும் போது “Energy security” (எனர்ஜி பாதுகாப்பு) என்பது மிக முக்கியமான தூண் எனக் குறிப்பிட்டார். ஆனால் நேரடியாக “எண்ணெய் வாங்குவதை நாம் தொடர்ந்து செய்வோம்” என்று குறிப்பிடவில்லை. இது மோடியின் ராஜ தந்திரம் எனலாம்.
பொதுவான நிலை: ரஷ்யா அதன்
எண்ணெய் வெளிநாட்டு சந்தையை நீடிக்க விரும்புகிறது; இந்தியா அதன் எண்ணெய்
தேவையை பாதுகாக்க விரும்புகிறது; அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்ய
எண்ணெய் கொள் முதலை குறைக்க அழுத்தம் கொடுக்கின்றன.
இதன் மூலம் மோடி உலகத்திற்குச் சொல்லும் செய்தி இது தான்: எந்தக் கொள்கையையும் எந்த ஒரு நாடும் இந்தியாவின் மீது ஆதிக்கம் செலுத்த முடியாது. எந்தக் கொள்கை முடிவையும் இந்தியா சுதந்திரமாக எந்த நாட்டின் தலையீடும் இன்றி எடுக்கும்.
இதன் மூலம் மோடி டிரம்புக்கு டிரம்பட் ஊதி உரக்கச் சொல்லும் செய்தி இது தான்: மாகா என்ற மேக் அமெரிக்கா கிரேட் கீதம் இந்தியாவில் 'மேக் இந்தியா கிரேட்' என்ற கொள்கைக்கு எந்தவிதமான ஊறும் உண்டாகாமல் அளவில் பாடப்படும். உங்கள் டிரம்பட் அமெரிக்க மக்களுக்கு மட்டுமே ஒலிக்க வேண்டும். இந்தியாவில் அந்த உங்கள் கீதம் எடுபடாது.
வந்தே மாதரம் - பார்தமாதாவிற்கு ஜே!




Comments