கர்ம யோகி மோடி மீண்டும் தேர்வாக வேண்டும் பாரதப் பிரதமராக!
சமீபத்திய ஒரு பேட்டியில் மோடியிடம் உங்களுக்கு மிகவும் பிடித்த சம்ஸ்கிரத ஸ்லோகம் எது என்று கேட்கப்பட்ட போது, “நித்வஹம் காம்யே ராஜ்யம் ந மோக்ஷம் ந ஸ்வர்க்கம் ந புனர்பவம் காம்யே துக்க தப்தனம் ப்ரனிநாமார்தினஷனம்” என்ற இந்த ஸ்லோகம் தான் தனக்குப் பிடித்ததாகச் சொன்னார். அதன் பொருள்: கிரீடம் வேண்டாம். சொர்க்கம் வேண்டாம். மோட்சம் கூட வேண்டாம். துன்பப்படும் அனைத்து ஜீவராசிகளின் கவலைகளைக் களைவதைத்தான் நான் மனதார விரும்புகிறேன். இந்த ஸ்லோகத்தின் படி தான் மோடி அவர்கள் கடந்த 60 மாதங்களாக பாரத தேசத்தை ஒரு கர்ம யோகி போன்று ஒவ்வொரு நாளும் 18 மணி நேரம் உழைத்துள்ளார். சுத்தம் சுகம் தரும் என்பார்கள். 60 ஆண்டுகளாக கழிப்பறை இல்லாத காரணத்தால் வெட்டவெளியில் மல-ஜலம் கழிக்கும் வேதனையிலிருந்து இந்தியாவை மீட்டவர் மோடி. இதனால் குறிப்பாக பெண்கள் எவ்வளவு ஆனந்த மடைந்தார்கள் என்பதைச் சொல்லத் தேவையில்லை. ஏழையாகப் பிறந்த மோடியால் தான் இதைச் சாதித்துக் காட்ட முடியும். பதவி ஏற்பு உரையிலேயே இதை தமது குறிக்கோள் என்று சொன்னதை முதலில் கிண்டல் செய்தவர்கள் பிறகு இது உலக அளவில் பாராட்டப்பட்டவுடன் மவுனம் ...