கந்த சஷ்டி விரதம் – 15 – 11 – 2020 முதல் 6 நாட்கள்
கந்த சஷ்டி விரதம் – 15 – 11 – 2020 முதல் 6 நாட்கள் இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா வரும் 15 ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்குகிறது . காப்புக்கட்டும் நிகழ்வைத் தொடர்ந்து 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள வேல் வாங்குதல் மற்றும் சூரசம்ஹாரம் நிகழ்வுகள் திருவிழாவாக நடைபெறும் . சூரசம்ஹாரம் கந்த சஷ்டி விரதத்தின் ஆறாவது கடைசிநாளில் நடைபெறும் . அடுத்த நாளில் முருகன் – தெய்வயானை , வள்ளி திருமண விழா நடைபெறும் . கொரோனாவினால் இந்த வருடம் நடக்கும் திருவிழாக்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை . நம்மிடம் உள்ள தீயகுணங்களான ஆணவம் , மாயை , கன்மம் , காமம் , பேராசை , செருக்கு , மயக்கம் , தற்பெருமை ஆகியவற்றை விடுத்து பல நற்குணங்களைப் பெறும் நோக்கில் இவ்விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது . ஸ்கந்த புராணம் சிவபிரானின் மூன்றாவது கண்ணிலிருந்து முருகன் பிறந்து , பார்வதி தேவியிடம் வேல் பெற்று , தேவர்களை சிறைபிடித்து அசுர சாம்ராஜ்யத்தை நடத்திய மூன்று அசுரர்களான சூரபத்மன் , சிங்கமுகா சூரன் , தாரகா சூரன் ஆகியவர்களை முருகன் வத...