Posts

Showing posts with the label பங்குனி உத்திரம் – 21-03-2019

பங்குனி உத்திரம் – 21-03-2019

Image
பங்குனி உத்திரம் – 21-03-2019 மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும் , பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு . ஏனென்றால் அந்த நன் நாளில் தான் பார்வதி - பரமேஸ்வரன் , தெய்வயானை - முருகன் , ஆண்டாள் - ரங்க மன்னார் , மீனாட்சி சுந்தரேஸ்வரர் என பல தெய்வத் தம்பதிகளின் திருமணங்கள்   நடந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன . இதைவிடச் சிறப்பான மற்றொரு விஷயம் , ராமாயணத்தில் வரும் தசரதச் சக்ரவர்த்தியின் நான்கு புதல்வர்களும் பங்குனி உத்திரத்தில்தான் திருமணம் செய்து கொண்டனர். தெய்வங்களின் திருமணம் மட்டுமல்லாது , பல தெய்வ அவதாரங்களும் இந்த பங்குனி உத்திரத்தில் நடந்துள்ளது . வள்ளியின் அவதாரமும் , ஸ்ரீ ஐயப்பனின் அவதாரமும் , அர்ஜ்ஜுனன் தோன்றியதும் இந்த நந்நாளில்தான் . தெய்வங்களெல்லாம் தேர்ந்தெடுத்து சிறப்பித்த இந்த பங்குனி உத்திர நட்சத்திரத்தன்று விரதம் இருப்பதற்கும் , அன்னதானம் வழங்குவதற்கும் உகந்த நாள் ...