Posts

Showing posts with the label வள்ளுவம் கட்டுரை - தும்மல்

வள்ளுவம் - 1 . தும்மல்

Image
தும்மல் ஆக்கம்: எஸ். சங்கரன் முன்னுரை : திருவள்ளுவரின் திருக்குறள் தமிழ் படித்த அனைவருக்கும் தெரிந்த நூல். பரிமேளழகர் முதல் பலரும் அந்த நூலைப் பற்றி பலபட ஆராய்ந்து எழுதி இருக்கிறார்கள் - இனி எழுதுவதற்கு மிச்சமில்லை என்ற அளவிற்கு. இந்த நிலையில் நான் புதிதாகச் சொல்ல என்ன இருக்கிறது? என்ற கேள்வி எழுவது ஒன்றும் ஆச்சரியமில்லை. இருப்பினும், திருக்குறளை ஒரு புதிய கோணத்தில் பார்த்து, ஒரு சில கட்டுரைகளை எழுதத் துணிந்துள்ளேன். அந்த கோணத்தில் எழுதிய முதல் கட்டுரை தான் இது. தும்மினால் யாரோ ஒருவர் உங்களை நினைக்கிறார்கள் என்பது வள்ளுவர் காலத்திற்கு முன்னாலிருந்தே நிலவி வரும் நம்பிக்கை. தும்மினால் அருகிலுள்ளவர்கள் 'நீடுவாழ்க' என்று வாழ்த்தும் வழக்கமும் வள்ளுவர் காலத்திற்கு முன்பிருந்தே இருத்திருக்கிறது.இந்த தும்மல் நம்பிக்கைகளை வைத்து அழகாக மூன்று குறள்களில் சித்திரிக்கிறார் வள்ளுவர். காதலனும், காதலியும் ஒன்றாக இருக்கிறார்கள். காதலனுக்கு தும்மல் வந்து தொலைக்கிறது. 'முதல் தும்மல் தான், க்வலை இல்லை' என்று நினைக்கிறான் காதலன். அவன் எண்ணப்படியே, காதலியும் 'நீவிர் நூறாண்டு வாழ்க...