கணேஷ் சங்கரனின் யுகே சர்வகலாசாலை பிளைமவுத் பிஎச்டி – ஏஐ
கணேஷ் சங்கரனின் யுகே சர்வகலாசாலை பிளைமவுத் பிஎச்டி – ஏஐயின் பட்டமளிப்பு நிகழ்ச்சி – 24-ம் தேதி ஜூலை 2026 கணேஷ் சங்கரன் வாய்மை ஆசிரியரின் மகன். அவர் தமது மனைவி மீனா, சகோதரி மீரா, அம்மா வத்ஸலா, அப்பா வாய்மை ஆசிரியர் சங்கரன் ஆகியவர்களை இந்த விழாவில் பங்கு கொள்ளச் செய்து தமது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார். அவரது அம்மா சக்கர நாற்காலியில் பயணம் செய்யும் நிலையில் இருந்தாலும், எல்லோரையும் பிசினஸ் கிளாஸ் ஆகாயவிமானப் பயணம், நட்சத்திர ஹோட்டல்களில் தங்குதல், வீல் சேர் வசதி கொண்ட வேனில் பயணம் என்று செலவைப் பொருட்படுத்தாமல் அவர் செயல்பட்டதை இங்கு குறிப்பிட வேண்டும். இந்த பயணத்தில் எக்ஸிடர் நகரம் – சமுத்திர நகரமான பிளைமவுத் – லண்டன் நகரம் என்று அந்த இடங்களையும் சுற்றிப் பார்க்கச் செய்து , இந்தப் பயணத்தை மறக்கமுடியாத ஒன்றாகச் செய்து விட்டார் . இதற்கு முழு ஒத்துழைப்பு அளித்த அவரது மனைவியையும் இந்த சமயத்தில் பாராட்ட வேண்டும் . அந்த விழாவின் சில போட்டோக்கள் இங்கு பிரசுரமாகி உள்ளது : கணேஷின் உறவினர்கள் அனைவரும் அவரது பட்டமளிப்பு விழாவிற்கு வாழ்த்துரை வழ...