Posts

Showing posts with the label ராஹுல் ஆங்கிலமும் – தங்கபாலுவின் தமிழ் மொழி பெயர்ப்பும்

ராஹுல் ஆங்கிலமும் – தங்கபாலுவின் தமிழ் மொழி பெயர்ப்பும்

Image
ராஹுல் ஆங்கிலமும் – தங்கபாலுவின் தமிழ் மொழி பெயர்ப்பும் பல வருடங்களுக்கு முன்பு சென்னை மெரீனா கடற்கரையில் ராஹுலின் தாத்தா நேரு ஆங்கிலத்தில் பேசியதை, செங்கல்வராயன் என்ற காங்கிரஸ் தலைவர் மொழி பெயர்த்தார். அதில் நேரு பேசியதை மொழிபெயர்க்காமல் தன் இஷ்டத்திற்கு தமிழில் மொழி பெயர்த்தார். அதை ஹிந்து பத்திரிக்கை மிகவும் கடுமையாக விமரிசனம் செய்தது. நேருவை மொழிபெயர்ப்பால் கொன்று விட்டார் என்ற அளவில் கடுமை இருந்ததாக ஞாபகம். நாட்டின் பிரதம மந்திரிக்குச் செய்யும் அவமரியாதை என்ற பாணியில் ஹிந்து விமரிசித்தது. நானும் அந்தக் கூட்டத்திற்குச் சென்று, இந்த மொழி பெயர்ப்புக் கூத்தைப் பார்த்து வெட்கித் தலை குனிந்தேன். இப்போது தங்கபாலு ஒரு படி மேலே சென்று தன் மனதிற்குத் தோன்றியதை எல்லாம் மொழி பெயர்ப்பு – விழி பெயர்ப்பு என்று அவர் ராஹுலை அப்படி முறைத்துப் பார்ப்பதை வைத்து ஊடக வாசிகள் பட்டம் கொடுத்துள்ளனர் – என்ற வகையில் கேலிக்கூத்தாக ஆக்கி விட்டார்.  ஆனால், தங்கபாலுவோ ‘வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்க்க வேண்டாம். என் மொழிபெயர்ப்பை தமிழ் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பாராட்டி உள்ளார். மக...