Posts

Showing posts with the label உயிரின் பயணம்

உயிரின் பயணம்

உயிரின் பயணம் குறிப்பு: உபநிஷத்திலேயே மிகவும் பெரியதும், அதிகமான அதிலும் புரிவதற்கு மிகவும் கடினமான தத்துவமும் அடங்கியது பிரஹாரண்ய உபநிஷதமாகும். இதில் யக்யவல்க்கியரின் தத்துவ விளக்கம் மிகவும் முக்கியமாக இடம் பெற்றிருக்கின்றது. ஜனக மஹாராஜாவுக்கு பரமார்த்த தத்துவம் பலபடியாக விவரமாக விளக்கிச் சொல்லப் பட்டிருக்கிறது. மேலும் பல ரிஷிகளின் கேள்விகளுக்குத் தகுந்த பதில்களை அளிக்கும் விதமாகவும் பல தத்துவங்கள் எடுத்துரைக்கப் பட்டிருக்கின்றன. அதில் குறிப்பாக, கார்க்கி என்ற ஒரு பெண் ரிஷியின் கேள்விகளுக்கு யக்யவல்க்கியரின் பதில்கள் மிகவும் பிரபலமானவைகள். இவைகளில் உள்ளவைகளில் சிலவற்றை வாய்மை மற்றும் இ-டச் இதழ்களின் மூலம் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். உயிர் உடலிருந்து எங்கு, எப்படிச் செல்லுகிறது என்பது இந்த உபநிஷத்தில் விளக்கப் பட்டிருக்கிறது. அதைப் பற்றிய விளக்கம் தான் இக்கட்டுரை. - ஆசிரியர். ஒரு மனிதன் இறக்கும் தறுவாயில் இருக்கிறான். அவனது உயிர் உடலை விட்டுப் பிரிந்து, வெளியில் வருகிறது. அவனுடைய உயிர் காற்றை அடைகிறது. 'மனித உயிரே! நீ இன்னும் மேலே போக வேண்டியது அவசியம். அதற்கு அனுகூலமா...