மோடியின் வரலாறு
நரேந்திர மோடி அவர்கள் , குஜராத்தை சேர்ந்த முக்கிய அரசியல்வாதிகளில் ஒருவர் ஆவார். தொடர்ந்து நான்கு முறை குஜராத் மாநிலத் இடைத்தேர்தலில் வெற்றிப்பெற்று , குஜராத் அரசியல் வரலாற்றில் நீண்டகால முதல்வராக இருந்தவர் என்ற சாதனையைப் பெற்றார். மிகப்பெரிய அளவில் தொழில் வளர்ச்சி ஏற்படவேண்டும் என்பதில் , அதிக ஆர்வம் கொண்டவராக விளங்கிய அவர் , மின்சாரம் , தண்ணீர் , சாலை வசதிகள் , பெண் கல்வி , ஆரோக்கியம் , ஊழலற்ற நிர்வாகம் , விவசாயம் , தொழில் வளர்ச்சி என அனைத்துத்துறைகளிலும் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி , குஜராத் மாநிலத்தை மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக மாற்றிக்காட்டினார். இவருடைய சாதனையைப் பாராட்டி , “ இந்தியா டுடே ” நாளிதழ் , “ இந்தியாவின் சிறந்த முதல்வர் ” என்ற விருதை வழங்கி கௌரவித்தது. மேலும் , குஜராத் கணினித்துறையில் இவர் ஏற்படுத்திய வளர்ச்சிக்காக ‘ கம்ப்யூட்டர் சொசைட்டி ஆஃப் இந்தியா ’ என்ற அமைப்பு “ இ-ரத்னா ” விருதை வழங்கி கௌரவித்தது. நாட்டின் வளர்ச்சிக்கு அடிகோலும் நிர்வாகமே , எதிர்கால வளர்ச்சிக்கு அவசியமானது எனக் கூறியது மட்டுமல்லாமல் , அதை செயல்படுத்தியும் காட்டிய நரேந்திர மோடி அவர்களின் வ...