துளசிச் செடியின் மகிமையைப் பறை சாற்றும் நாசா விஞ்ஞானிகள்
சூடான செய்தி : துளசிச் செடியின் மகிமையைப் பற்றி இந்துக்கள் நன்றாகவே தெரிந்து வைத்துள்ளனர் . ஆனால் அது வெறும் பக்தியின் வெளிப்பாடு என்றும் , வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் எழுந்த அபிப்பிராயம் என்றும் இந்துக்களை எள்ளி நகையாடுபவர்களும் , நாத்திகர்களும் உண்டு . ஆனால் , அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் , நிலாவில் தண்ணீர் இருப்பதால் மனிதன் உயிர் வாழமுடியுமா என்பதை சோதிக்க , பூமியிலிருந்து ஒரு செடியை சந்திரமண்டலத்திற்கு அனுப்பி , வளர்க்க இருக்கிறார்கள் . அந்தச் செடி , துளசி ! இதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் என்ன ? எந்தச் செடிக்கும் இல்லாத அற்புதத் தன்மை துளசிக்கு உண்டு என்று கண்டறிந்து சொன்ன உண்மை இது தான் : ‘ உலகத்திலேயே 24 மணி நேரமும் சுவாசிக்கும் ஒரே தாவரம் துளசி மட்டும் தான் . அது மட்டும் தான் 24 மணி நேரமும் தூய்மையான ஆக்சிஜனை நமக்குத் தரும் . கரிமிலவாயுவை எடுத்துக்கொண்டு தூய்மையான பிராணவாயுவை எப்போதும் எந்த சூழ்நிலையிலும் தரும் சக்தி துளசிக்கு மட்டுமே உண்டு .’ சந்திரமண்டலத்தில் ஆக்சிஜன் உருவாக வேண்டும் , அதன் மூலம் மனிதர்கள் அங்கே வாழ வழிவகுக்க வேண்டும் என்ற நோக்கத...