அப்துல் கலாம் என்ற மா மனிதர்
அப்துல்கலாம் ஜனாதிபதியாக பதவியில் இருக்கும் போது அவரது செகரட்டிரியாகப் பணி ஆற்றிய பி . எம் . நாயர் , ஓய்வு பெற்ற ஐ . ஏ . எஸ் . அதிகாரி , கலாமுடம் பழகி அந்த அற்புத நாட்களைப் பற்றி சமீபத்தில் பொதிகை தொலைக் காட்சியில் ஒளிபரப்பட்ட பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார் . ‘ கலாம் எஃபக் ’ என்ற தலைப்பில் புத்தகமும் எழுதி உள்ளார் . அதன் தழுவலான பேட்டியின் கருத்துக்கள் இதோ உங்கள் பார்வைக்கு : Ø கலாம் வெளிநாட்டிற்குச் சென்ற போது அவருக்குக் கொடுக்கப்படும் பரிசுகளை வாங்காமல் இருந்தால் அது அந்த நாட்டினரை அவமானப்படுத்துவதுடன் , இந்தியாவிற்கும் தர்ம சங்கடமான நிலையை உருவாக்கும் என்பதால் , அவைகளை வாங்கி , பிறகு அவைகளை போட்டோ எடுத்து பட்டியல் இட்டு , பிறகு அவைகளை அரசாங்கக் கருவூலத்தில் சேர்த்து விடுவது கலாமின் பாணி . ராஷ்ரபதி பவனிலிருந்து செல்லும் போது , கலாம் ஒரு பென்சில் கூட எடுத்துச் செல்ல வில்லை என்பதை நான் தெரிவிக்க வேண்டும் . Ø 2002 வருட ரம்தான் நோன்பு ஜூலை - ஆகஸ்ட் மாதம் வந்தது . ஒவ்வொரு வருடமும் ஜனாதிபதி இஃப்தார் விருந்தை ராஷ்ரபவதி பவனில் நடத்துவது மரபு . ஆனால் , கல...