பாரதப் பிரதமர் மோடியின் மே 15 முதல் மே 20 வரை 6 நாட்கள் 5 நாடுகளுக்கு அரசுப் பயணம்
1. மே மாதம் 15-ல் ஒரு நாள் ஐக்கிய அரபு அமீரக நாட்டு (UAE) மோடியின் அரசுப் பயணம் மோடி இந்த தமது அரசுப் பயணம் குறித்த தகவல்: ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இந்தப் பயணம் குறுகியதாக இருந்தபோதிலும் , அசாதாரணமான முறையில் மிகுந்த பலனளிப்பதாக அமைந்தது. எனது சகோதரர் , மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களுடன் , இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடையிலான விரிவான மூலோபாய கூட்டாண்மையை மேலும் ஆழமாக்குவதற்கான வழிகள் குறித்து ஆழமான விவாதங்கள் நடத்தப்பட்டன. இந்தப் பயணத்தின் முடிவுகள் நமக்கிடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவதோடு , வளர்ச்சி மற்றும் செழுமையை அடைவதற்கும் பங்களிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். 2. மே 16 & 17 - 2 நாட்கள் நெதர்லாந்து அரசுப் பயணம் மோடி நெதர்லாந்து அரசுப் பயணம் குறித்து வெளியிட்ட அறிக்கை : " நான் பிரதமர் ராப் ஜெட்டன் ( Rob Jetten) அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன் , அத்துடன் மாண்புமிகு மன்னர் வில்லியம்-அலெக்சாண்டர் மற்றும் ராணி மாக்சிமா ஆகியோரையும் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெறவுள்ளேன். மே...