துர்கா பூஜை - ஆரம்பம் - 28 - 09 - நிறைவு - 02 - 10- 2025 (5 நாட்கள்
இந்த ஆண்டு ( 2025) துர்கா பூஜை செப்டம்பர் 28- ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 2- ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. துர்கா பூஜை என்பது இந்தியாவின் கிழக்கு மாநிலங்களான மேற்கு வங்கம் , அசாம் , திரிபுரா மற்றும் ஒடிசா போன்ற பகுதிகளில் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் ஒரு முக்கிய இந்துப் பண்டிகை ஆகும். இது அன்னை துர்கா தேவியின் மகிமையையும் , தீமையின் மீது நல்லவை பெற்ற வெற்றியையும் கொண்டாடுகிறது. துர்கா தேவி , மகிஷாசுரன் என்ற அரக்கனை அழித்து உலகைக் காத்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் இந்தப் பண்டிகை 5 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த விழா நவராத்திரி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும் , அதன் முக்கிய சடங்குகளும் கொண்டாட்டங்களும் கடைசி ஐந்து நாட்களுக்குள் அடங்கும். மகா சஷ்டி: விழாவின் முதல் நாள். இந்த நாளில் , துர்கா தேவியின் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு , விழா ஆரம்பிக்கப்படும். மகா சப்தமி: இரண்டாவது நாள். இந்த நாளில் முக்கிய பூஜைகள் தொடங்குகின்றன. மகா அஷ்டமி: மூன்றாவது நாள். இதுவே மிகவும் முக்கியமான நாள். இதில் குமாரி பூஜை மற்றும் சந்தி...