Posts

Showing posts with the label 2023 - (மார்கழி 10)

ஆருத்ரா தரிசனம் செவ்வாய்க்கிழமை டிசம்பர்-26, 2023 - (மார்கழி 10)

Image
வியாக்ரபாத முனிவர் , பதஞ்சலி முனிவ ர் ஆகிய இருவ ரும் சிவ பெருமானின் திருநடனத்தை காண விரும்பி ஈசனை துதித்தனர். அவர்களுக்காக திருநடனத்தை நிகழ்த்திக் காட்டிய நிகழ்வு தான் ஆருத்ரா தரிசனமாக கொண்டாடப்பட்டு வருகிறது . சிவபெருமானின் அம்சமான நடராஜரை ஆருத்ரா நன் நாளில் வணங்குவது வாழ்வில் நலன்கள் பல பெற்று உன்னத நிலையை அடைவதற்குச் சிறந்த வழியாகும்.     ஆடி முதல் மார்கழி வரை தேவர்களின் இரவு பொழுதாகக் கருதப்படுகிறது. கடைசி பகுதியான மார்கழி மாதம் தனுர் மாதம் என போற்றப்படுகிறது. இது தேவர்களின் பிரம்மமுகூர்த்த காலமாகும். மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர தினத்தன்று தேவர்கள் இறைவனுக்கு திருவாதிரை நட்சத்திர நாளில் பூஜை செய்வதாக ஐதீகம். அப்போது சிவன் கோயில்களில் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஆருத்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா எனப்படுகிறது. ஆருத்ரா தரிசனம் அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பாக நடைபெறும். அதுவும் சிதம்பரம் கோயிலில் ஆருத்ரா தரிசனம் மிகவும் முக்கிய ஆராதனை விழாவாகக் கொண்டாடப்பட...