கிருஷ்ண ஜென்மாஷ்டமி ஆகஸ்ட் 16, 2025 - சனிக்கிழமை
ஆகஸ்ட் 16 , 2025 அன்று கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி , கிருஷ்ணரின் 5252வது பிறந்த தினமாகும். கிருஷ்ண அவதாரம் மகாவிஷ்ணுவின் 9 வது அவதாரமாகும். பவான் கிருஷ்ணர் , துவாபர யுகத்தில் பூமியில் அவதரித்ததாக புராணங்கள் சொல்கின்றன. அதர்மத்தை அழிப்பதற்காகவும் , மனிதகுலத்தை நேர்வழிப்படுத்தி , துன்பங்களில் இருந்து விடுவிப்பதற்காகவுமே கிருஷ்ண அவதாரம் நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது. வசுதேவர்-தேவகியின் எட்டாவது குழந்தையாக அவதரித்த கிருஷ்ணர் , அதே இரவில் கோகுலத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு , நந்தகோபர் மற்றும் யசோதனையின் மகனாக மறைத்து வைத்து வளர்க்கப்பட்டார். சிறு குழந்தையாக இருந்த போதே கோகுலத்தில் பல மாய வேலைகள் செய்து , தன்னை கொல்ல வந்த அரக்கர்களை கொன்று , ஆயர்பாடியில் இருந்தவர்களை காத்தார். இறுதியாக தனது தாய்மாமனான கம்சனையும் வதம் செய்தார். கம்ச வதம் மட்டும் கிருஷ்ண அவதாரத்தின் நோக்கம் கிடையாது. பாரத போரில் அதர்மத்தை அழித்து , தர்மத்தை நிலை நாட்டியதுடன் , மனிதகுலத்தை துன்பத்தில் இருந்து மீட்டு , மோட்சத்திற்கான வழியை காட்டும் பகவத்கீதையை அரு...