பிச்சை எடுத்து பிழைத்தல்
வள்ளுவம்: 3 பிச்சை எடுத்துப் பிழைத்தல் எழுதியவர் : எஸ். சங்கரன் பிச்சை எடுத்துப் பிழைப்பு நடத்துவது மிகவும் கேவலமான ஒன்று. ஆனால், தானம் சிறந்தது என்கிறது சாத்திரம். 'ஏற்பது இகழ்ச்சி' என்று சொன்ன ஒளவையார், 'ஐயம் இட்டு உண்' என்று சொல்கிறார். 'பிச்சை புகினும் கற்கை நன்றே' என்பது கற்பதின் அவசியத்தை வலியுறுத்த, 'மிகவும் கீழான தொழிலான பிச்சைகூட எடுத்தாகினும் படிக்கலாம்; தப்பில்லை' என்ற அளவுக்கு ஒளவைப் பிராட்டியார் சொல்கிறார். பிச்சை போடுவது-அதாவது தானம் செய்வது நல்லது என்றால், அதைப் பெற பிச்சைக்காரர்கள் இருக்கத்தான் வேண்டும் என்பதாகிறது. 'பிச்சை எடுப்பது இழிவு; ஆனால், பிச்சை இடுவது தர்மம்' என்ற நிலை முன்னுக்குப் பின் முரணாக இருப்பதாகப் படும். கஷ்டப்படுவரிடம் கருணை காட்டுவது அவசியமானதால், உதவியின் ஒரு பரிணாமம் தான் பிச்சை என்றாகிறது. இருப்பினும், பிச்சை போடுவது புண்ணியமான காரியமானாலும், பிச்சை எடுப்பது ஒரு கேவலமான தொழில் என்பதில் எந்த வித கருத்து மாறுபாடும் இருக்க முடியாது. 'பிச்சை என்பது ஒரு தொழிலா?' என்ற கேள்வி எழலாம். வள்ளுவருக்கும் ...