லோக் சபாவில் வந்தே மாதரம் பாடலின் 150 வருட பூர்த்தி உரையின் முக்கிய அம்சங்கள்
லோக் சபாவில் வந்தே மாதரம் பாடலின் 150 வருட பூர்த்தி உரையின் முக்கிய அம்சங்கள்
டிசம்பர் 8, 2025 அன்று மோடியின் உணர்ச்சி பொங்கிய உரை இந்த வந்தே மாதர பாடலின் பின்னணியைப் பற்றித் தெரியாதவர்களுக்கு இது ஒரு அமிர்த பானமாகும்.
- ஆசிரியர் - வாய்மை.
வந்தே மாதரம் பங்கிம் சந்திரரால் 1875 வருடம் இயற்றப்பட்டது. அப்போது இந்தியா பிரிட்டிஷின் அடிமையாக இருந்தது. தங்களின் ஆட்சியை நீடிக்கவும், இந்திய மக்களின் சுதந்திர தாகத்தை அழிக்கவும், அப்போதைய பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசு இந்திய மக்கள் அனைவரையும் பிரிட்டிஷ் தேசிய கீதமான - "GOD SAVE THE QUEEN" - கட்ட்டாயப் படுத்தும் அந்த தருணத்தில் வங்காள தீவிர தேச பக்தரான பங்கிம் சந்திர ரால் இயற்றப்பட்டது. அதே வந்தேமாதரம் பாட்டு சில வருடங்கள் கழித்து 1882 வருடத்தில் இதே வந்தே மாதரம் பாட்டை தமது நாவலான 'ஆனந்த மடம்' என்ற நாவலில் அந்த நாவலின் கதாநாயகன் பாடுவதாக அமைத்தார்.
வந்தே மாதரம் பாடல் சுதந்திர தாகம் கொண்டவர்களின் குரலாக இந்தியாவின் கிழக்கிலிருந்து மேற்கு, வடக்கிலிருந்து தெற்கு என்று இந்தியாவின் அனைத்து திசைகளிலும் எதிரொலித்தது.
இந்த சுதந்திர தாகத்தை இந்திய மக்களிடையே எழுப்பிய காரணத்தால் அதை எதிர்கொள்ளத்தான் பிரிட்டிஷ் பிரித்தாளும் கொள்கையை கடைப்பிடித்தனர்.
அதன் முதல் கட்டமாக வங்காளத்தைத் துண்டாட விழைந்தனர். அதன் காரணமாக 1905 வங்காளம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அதை எதிர்த்துப் போராடும் சுதந்திர கீதமாக வந்தே மாதர பாடல் வங்காளத்தில் மட்டும் அல்லாமல், இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் ஒலிக்கத் தொடங்கி, விடுதலை இயக்கத்திற்கு உத்வேகம் கொடுத்தது. இந்த கீதம் இந்தியாவின் மேலும் பிளவுகள் ஏற்படாமல் காத்துள்ளது என்றால் மிகை இல்லை. இந்த வந்தே மாதர கீதம் லண்டனிலும் வீர் சாவர்கரால் ஒலிக்கப்பட்டது. அதே சமயத்தில் வங்காளத்தில் தீவிர தேசபக்தர்களான பிபின் சந்திர பால் மற்றும் மஹரிஷி அரபிந்தோ கோஷ் ஆகிய இருவர்களால் 'வந்தே மாதரம்' என்ற பெயரில் ஒரு செய்தித் தாள் ஆரம்பிக்கப்பட்டது. இது பிரிட்டிஷால் தடை செய்யப்படவும், மேடம் பிகாஜி காமா பாரிசில் 'வந்தே மாதரம்' என்ற அதே பெயரில் செய்தித் தாளை வெளியிட்டார். அது மட்டுமல்ல.
தமிழ் நாட்டில் வ.உ. சிதம்பரனார் தமது சுதேச கப்பலுக்கு .வந்தே மாதரம்' என்றே நாமகரணம் சூட்டினார். மஹா கவி சுப்பிரமணிய பாரதியும் வந்தே மாதரம் பாடலை தமிழில் மொழிபெயர்த்து தமிழ் மக்களின் விடுதலைக் கனலை கொழுந்து விட்டு எரியவைத்தார். மேலும் வந்தே மாதரம் என்ற ஒரு பத்திரைகையையும் அச்சிட்டு வெளியிட்டவர் மஹா கவி சுப்பிரமணிய பாரதியாவார்.
ஆனால் இந்த காந்திஜியின் சொற்கள் மதிக்கப்படாமல் வந்தே மாதரம் பாடல் முஸ்லீம் லீக் கட்சியின் ஜின்னா லக்னோவில் 15 - 10 - 1937 அன்று தனது எதிர்ப்பைக் காட்டினார். 'ஆனந்த மடம்' நாவலின் பின்னணியில் உள்ள இந்த வந்தே மாதரம் பாடல் முஸ்லீம்களை மன உலைச்சலுக்கு ஆளாக்கும்' என்பது தான் ஜின்னாவின் எதிர்ப்புக்குக் காரணம்.
அதை ஒரு வீர விடுதலை வீரராக ஜின்னாவின் எதிர்ப்பை எதிர்கொள்ளாமல், நேரு 20 - 10 1937 அன்று (5 நாட்கள் கழிந்த பிறகு) தமது கருத்தை இப்படி வெளியிட்டார்: 'நான் வந்தே மாதரம் எழுந்த பின்னணியைப் படித்தேன். அது முஸ்லீம்களை தூண்டும் விதமாக உள்ள பாடல் தான்'
காங்கிரஸ் செயல் குழுவின் 26 - 10 - 1937-ன் பரிந்துரையின் மூலம் வந்தே மாதரம் தனது முழுப்பாடலை இழந்து, பல வரிகள் நீக்கப்பட்ட இப்போதையை குறுகிய வந்தே மாதரம் பாடல் முஸ்லீம்களின் ஆதரவுக்கு அடி பணிந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட து என்பது சரித்திரம். காங்கிரசின் முஸ்லீம்களுக்கு அடிபணிந்து அவர்களை வோட் வங்கியாக நடத்தும் மன நிலை காங்கிரசுக்கு இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பிருந்தே உள்ளது.
வந்தே மாதரம் பாடல் துண்டாடப்பட்டு முஸ்லீம்களிடம் தலை வணங்கிய அந்த தருணத்திலேயே, இந்தியா இரண்டாக துண்டாடப்படும் படலத்திற்கான வித்தை காங்கிரஸ் விதைத்து விட்டது. காங்கிரஸ் தனது கொள்கை முடிவுகளைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை அப்போதே முஸ்லீம்களிடம் அடகு வைத்து விட்டது. அந்த நிலை இன்று வரை காங்கிரசில் நீடிக்கிறது.
பாரதியின் வந்தே மாதர இரண்டு கீதங்கள்
1. வந்தே மாதரம் - இயற்றியவர்: சுப்பிரமணிய பாரதி
பல்லவி
வந்தே மாதரம் என்போம்-எங்கள்
மாநிலத் தாயை வணங்குதும் என்போம். (வந்தே)
சரணங்கள்
ஜாதி மதங்களைப் பாரோம்- உயர்
ஜன்மம் இத்தேசத்தில் எய்தினார் ஆயின்
வேதியர் ஆயினும் அல்லது
வேறு குலத்தினர் ஆயினும் ஒன்றே. (வந்தே)
ஈனப் பறையர்களே ஆயினும்- அவர்
எம்முடன் வாழ்ந்து இங்கு இருப்பவர் அன்றோ?
சீன தேசத்தவர் ஆகி விடுவாரோ – பிற
தேசத்தர் போல் பல தீங்கு இழைப்பாரோ? (வந்தே)
ஆயிரம் உண்டு இங்கு ஜாதி- எனில்
அன்னியர் வந்து புகல் என்ன நீதி? — ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர்- தம்முள்
சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ? (வந்தே)
ஒன்று பட்டால் உண்டு வாழ்வே- நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்று இது தெரிந்து கொள்ள வேண்டும்- இந்த
ஞானம் வந்த பின் நமக்கு என்ன வேண்டும்? (வந்தே)
எந்த நிலை
வாய்த்தாலும் நம்மில்
அனைவருக்கும் அந்த நிலை பொதுவாகும்
முப்பது கோடியும் வாழ்வோம்- வீழ்ந்தால்
முப்பது கோடியும் முழுதாய் வீழ்வோம். (வந்தே)
இழிவான அடிமைத்தொழில் செய்து – முன்பு
கடந்த நாட்களுக்கு மனம் நாணித்
தொல்லை இகழ்ச்சிகள் தீர– இந்தத்
அடிமை நிலைமையைத் தூவென்று தள்ளி (வந்தே)
2. வந்தே மாதரம் - இயற்றியவர்: சுப்பிரமணிய பாரதி
பல்லவி
வந்தே மாதரம் – ஜய
வந்தே மாதரம்.
சரணங்கள்
ஜயஜய பாரத ஜயஜய பாரத
ஜயஜய பாரத ஜயஜய ஜயஜய (வந்தே)
ஆரிய பூமியில் நாரியரும் நர
சூரியரும் சொல்லும் வீரிய வாசகம் (வந்தே)
நொந்தே போயினும் வெந்தே மாயினும்
நன்தேசத்தவர் உவந்தே சொல்வது (வந்தே)
ஒன்றாய் நின்று இனி வென்றாயினும் உயிர்
சென்றாயினும் வலி குன்றாது ஓதுவோம். (வந்தே)


Comments