Posts

Showing posts with the label இறங்கல் செய்தி - கிரிஷ் கர்னாட் மறைவு – 10-06-2019

இறங்கல் செய்தி - கிரிஷ் கர்னாட் மறைவு – 10-06-2019

Image
கிரிஷ் கர்னாட் (பிறப்பு: 19-05-1938 இறப்பு: 10-06-2019 – 81-வதில் இறப்பு) பன்முகம் கொண்ட கலைஞர் என்றால் மிகையாகாது. ஆங்கிலம் – கன்னடம், ஹிந்தி என்று பல மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவர். தார்வார் கர்நாடகா யுனிவர்சிட்டியில் பி.ஏ. பட்டம் பெற்று பிறகு இங்கிலாந்தில் ரோட்ஸ் ஸ்காலராக மேக்டலென் ஆக்ஸ்போர்டில் எம்.ஏ. பட்டம் பெற்றவர். “என்ன படித்தாலும் என் இதயம் கன்னடத்தில் தான் இயங்குகிறது” என்று கர்னாட் பெருமையாகச் சொல்வார். அதன் படி அவர் கன்னட இலக்கியத்தில் தமது மேதாவிலாசத்தைப் பதிவு செய்துள்ளார். அதன் காரணமாக 1998-ம் ஆண்டு கார்னாட் ஞானபீடம் பட்டம் பெற்றார்.   இலக்கியத்தில் கார்னாட் கொண்ட ஈடுபாட்டுடன் வலது சாரிக் கொள்கையினை மூர்க்கமாக எதிர்த்துப் போராடியவர். அதன் காரணமாக கார்னாட்டை ஆதரித்தவர்களும், எதிர்த்தவர்களும் பலர் உண்டு. 2012-ம் ஆண்டு டாட்டா இலக்கிய விழாவில் பம்பாயில் அவரை ‘அவரது நாடக வாழ்க்கை’ என்பதைப் பற்றிப் பேச அழைக்கப்பட்டார். ஆனால் அவர் அதை விடுத்து, வி.எஸ்.நைபால் என்ற இலக்கிய ஆசிரியரை அவரது இந்திய முஸ்லீம்களை எதிர்க்கும் குணத்தைப் பற்றிப் பேசியதுடன், அவருக...