குரு பூர்ணிமா அல்லது வியாச பூர்ணிமா – 09-07-2017
குரு பூர்ணிமா அல்லது வியாச பூர்ணிமா ஒவ்வொரு வருடமும் ஆனி மாதத்தில் வரும் பவுர்ணமியாகும் . இந்த வருடம் 09-07-2017 அன்று குரு பூர்ணிமா. இந்த நாளில் தான் வியாச பகவான் பிரம்ம சூத்திரத்தை – வேதங்களின் சாரமாகக் கருதப்படும் பிரம்ம சூத்திரத்தை – எழுத ஆரம்பித்த நன்னாள். ப்ரஸ்தான த்ரயம் என்று போற்றப்படும் மூன்று மூல நூல்களை இயற்றி குரு ஸ்தானத்தில் வீற்றிருக்கும் பேறு பெற்றவர் வியாசர் முனி. நான்கு வேதங்கள், பகவான் அருளிய கீதை, பிரம்ம சூத்திரம் ஆகியவைகள் தான் அந்த மூன்று மூல நூல்களாகும். ‘ குரு ’ என்ற சம்ஸ்கிருத வார்த்தைக்கு ‘ இருளை விலக்குபவர் ’ என்று பொருள் . வியாச குருவானவர் தாம் இயற்றிய மூல நூல்கள் மூலம் மனிதர்களின் அறியாமையாகிய இருளை அகற்றி , ஞானோதய மார்க்கத்திற்கு அழைத்துச் செல்கிறார் . ஆகையால் அவரே மூல குருவாகப் போற்றப்படுகிறார். குருவின் அநுக்கிரஹத்தில்தான் ஞானம் கிடைக்கும் என்ற விஷயம் சாந்தோக்ய உபநிஷத்தில் சொல்லியிருக்கிறது . ஆசார்யவான் புருஷோ வேத – ஆசார்யனைப் பெற்ற புருஷன் தான் ஞானத்தை அடைகிறான் – என்று அதில் ...