அச்சே தின் ஜரூர் ஆயேங்கே - நல்ல நாள் சீக்கிரம் வரும்
அச்சே தின் ஜரூர் ஆயேங்கே - நல்ல நாள் சீக்கிரம் வரும் பிரிட்டன் பிரதம மந்திரி டேவிட் கெமரின் 13-11-2015 அன்று இங்கிலாந்தின் வெம்லே அரங்கத்தில் கூடி இருந்த 70,000 அயல் நாட்டு இந்திய வம்சாவளியினர் மத்தியில் மிகவும் உருக்கமாக உரை ஆற்றும் போது முழக்க மிட்டார் : ‘ ஒரு சாய்வாலா இந்தியாவின் பிரதம மந்திரியாக முடியாது என்று சொன்னார்கள் . ஆனால் , இதோ மோடி இங்கே இந்தியாவின் பிரதமராக உங்கள் முன் நிற்கிறார் . மோடி சொன்னார் : ‘ அச்சே தின் ஆனேவாலே ஹை - நல்ல நாள் வர இருக்கிறது ’ என்று . ஆனால் நான் சொல்கிறேன் : அச்சே தின் ஜரூர் ஆயேங்கே - நல்ல நாள் சீக்கிரம் வரும் .’ இந்தப் புகழுரையைச் சொல்லுவதற்கு முன் கேமரின் சாதக - பாதகங்களைச் சீர்தூக்கிப் பார்த்திருக்க வேண்டும் . அவர் உரையைக் காது கொடுத்துக் கேட்டவர்கள் , கேமரின் எவ்வளவு உணர்வு பூர்வமாக - ஆத்மார்த்தமாகச் சொன்னார் என்பதை உணர்ந்திருப்பார்கள் . கேமரின் மேலும் சொன்ன வாசகங்கள் இந்திய வம்சாவளியினருக்கும் , இந்தியாவிற்கும் மேலும் பெருமை சேர்க்கும் . கேமரின் தொடர்ந்து சொன்னவைகள் : நமஸ்த...