Posts

Showing posts with the label இரத்தல் இனிது

இரத்தல் இனிது

இரத்தல் இனிது எழுத்து: பவித்திரன். குறிப்பு: வள்ளுவர் முரண்பாடான கருத்துக்களைச் சொல்லி இருக்கிறார் என்று தெய்வப்புலவரை நமது நிருபர் அவமதிப்பதாகத் தோன்றும். ஆனால், எந்த ஒரு இலக்கியத்தையும் எப்பொழுது வேண்டுமானாலும் எந்தவித பயமுமின்றி ஆராயும் தீரம் இருந்தால்தான் அந்த மொழியும் செழித்து வளரும். தமிழைப் பொருத்த அளவில், ஆங்கில இலக்கியத்தைப் போல் ஆழ்ந்த ஆராயும் சூழ்நிலை இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். தமிழில் வாழ்த்துரைதான் உண்டு. ஆய்வுரை அறவே இல்லை என்ற நிலைதான் இன்றும் நிலவுகிறது. பல மதிப்புரைகள் எல்லாம் வாழ்த்துரையாகத் தான் இருக்கின்றன. இந்த நிலை மாறினால்தான் இலக்கியம் நின்று நிலைத்திருக்கும். 'ஆகாய விமானமா? எங்கள் மூதாதையர்களுக்கு முன்பே தெரியும். புஷ்பக விமானம் தான் ஆகாய விமானத்தின் முன்னோடி!' என்று திண்ணை வேதாந்தம் மறைந்து, ஆகாய விமானத்தை முதலிலேயே கண்டுபிடித்திருந்தால் அது நமக்குப் பெருமை. வெறும் கற்பனை உலகத்தில் மட்டும் சஞ்சரிப்பதால் நாட்டுக்கோ, வளர்சிக்கோ எந்தவிதத்திலும் உதவிபுரியாது. பரந்த உள்ளம், விரிந்த உலகப் பார்வை, சீர்தூக்கி ஆய்வு செய்யும் திறன் - இவைகள் அனைத்த...