தவத்தின் தரம்
தவத்தின் தரம் தவம், தவத்தின் குணம் இவைகளை அற்புதமாக விவரிக்க இரண்டு உபமானங்களை வள்ளுவர் உபயோகிக்கிறார். அவைகள் தான் இவைகள்: 1. சுடச் சுடத் தீயில் வாட்டிய தங்கத்தின் ஒளி அது தீயின் ஜ்வாலையையும், சுடும் நேரத்தையும் பொறுத்திருக்கும் என்பதை தவத்திற்கு பொருத்தி விளக்குகிறார். 2. சிவந்த குன்றிமணியின் மூக்கில் உள்ள கருமையை தவத்தின் கருமையாக்கி விடுகிறார். துறவுக்குத் தவம் வேண்டும். தவம் என்றால் என்ன? உடலை வருத்தி உணவைச் சுருக்கி, காற்று, பனி, வெயில், மழை இவைகளால் உடலை வருத்தி உள்ளத்தின் தீய எண்ணங்களைப் பொசுக்கித் தூயதாக்கி ஞானச் சுடராகத் திகழும் நிலைதான் தவம். அது தான் துறவியின் உன்னத நிலை. துறவி தன் உடலைத் துன்பத்தால் சுடச் சுடச் தான் பாபம் நீங்கி ஞானம் பிறக்கும் என்கிறார் வள்ளுவர். அதைச் சொல்லும் பொழுது தங்கத்தை உபமானமாகச் காட்டுகிறார். பொன்னை அதாவது தங்கத்தை உருக்க உருக்கத் தான் -அதாவது வள்ளுவர் வாக்கில் சொல்வதானால், பொன்னை சுடச் சுடத் தான், பொன்னில் உள்ள அழுக்குப் போய் தக தக வென்று தங்கம் ஒளிவிடும். அழுக்கான தீய எண்ணங்கள் தீயின் ஜ்வாலையில் பொசுக்கி ஞானம் பெற்ற தூய துறவும் அந்த...