Posts

Showing posts with the label ஓணம் பண்டிகை - 05 -09 - 2025

ஓணம் பண்டிகை - 05 -09 - 2025

Image
  ஓணம் என்பது தை மாதம் தமிழ் நாட்டில் கொண்டாடப்படும் பொங்கல் திருவாழாவைப் போன்றதாகும் . இந்த ஓணம்  இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய அறுவடைத் திருவிழா ஆகும். இது பத்து நாட்கள் கொண்டாடப்படும் திருவிழா . இந்த ஆண்டு ஓணம் பண்டிகை ஆகஸ்ட் 26- ஆம் தேதி தொடங்கி , செப்டம்பர் 5- ஆம் தேதி திருவோணத்துடன் நிறைவடைகிறது.   ஓணம் பண்டிகை அஸ்தம் நட்சத்திரத்தி தொடங்கி கடைசி நாளான திருவோணம் நட்சத்திரத்துடன் முடியும். இந்த பத்து நாட்களிலும் பல்வேறு சடங்குகள் மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெறும். அதில் , திருவோணம் எனப்படும் பத்தாவது நாள் மிக முக்கியமானதாகும்.   இந்த பண்டிகை மகாபலி சக்கரவர்த்தியின் வருகையை நினைவு கூறுகிறது. மகாபலி ஒரு காலத்தில் கேரளாவை ஆட்சி செய்த ஒரு மன்னர். அவர் மிகவும் நல்லவரும் , தாராள குணம் கொண்டவரும் ஆவார். மக்கள் அவரை மிகவும் நேசித்தார்கள்.   விஷ்ணுவின் அவதாரமான வாமனர் , மகாபலியின் பெருமையைச் சோதிக்க பூமிக்கு வந்தார். வாமனர் மகாபலியிடம் மூன்று அடி நிலம் கேட்டார். மகாபலி அதற்கு சம்மதித்தார். வாமனர் முதல் அடியால் வானத்தையும் ...