ரவுத்ரம் பழகு
நான்கு வேதங்கள், பல உபநிஷத்துக்கள், இதிகாச புராணங்கள், அற்புதமான தர்மத்தை உபதேசிக்கும் இலக்கியங்கள், ராமாயணம் – மஹாபாரதம் போன்ற காவியங்கள், மனுஸ்ருதி போன்ற வழிகாட்டு விதிகள் என்று ஹிந்து மதம் என்ற ஸனாதன தர்மம் மிகவும் வலுவான அஸ்திவாரம் கொண்டது. அர்த்த சாஸ்திரம் போன்ற ராஜ நீதிக்கு வழிகாட்டும் உன்னதமான விதிகளைக் கூறும் நூல்கள் பல, ஹிந்து மதத்தின் – பாரத கண்டத்தின் மேன்மையை உலகத்திற்குப் பறை சாற்றிய வண்ணம் மிளிர்கின்றன. அத்துடன் இந்தியாவின் பல மொழிகளில் பாசுரங்களும், பாடல்களும் ஹிந்துமதத்தையும் பக்தி மார்க்கத்தையும் தர்மத்தையும் ஆத்ம சிந்தனைகளையும் இன்னும் வலுவடையச் செய்துள்ளன. தமிழ் மொழியின் வளர்ச்சியும், சக்தியும் அதன் பக்தி இலக்கியத்தில் தான் வேரூன்றி இருப்பதை ஒருவரும் மறுக்க முடியாது. அதில் வைஷ்ணவ ஆழ்வார்களின் பாசுரங்கள் சிறப்பானவை. அதில் ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை தமிழுக்கு ஒரு சிறந்த அணிகலனாகும். மேலும் ஆண்டாளின் பெருமாள் பக்தி – சூடிக் கொடுத்த சுடர்கொடி – கோதை நாச்சியார் – என்று கோயிலில் வணங்கும் தெய்வமாகக் கொண்டாடப்படுகிறார். கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில்...