குருகுலக் கிளர்ச்சி
ஆசிரியர் குறிப்பு: பிராமணத் துவேஷம் எந்த அளவுக்கு ‘தீண்டாமை ஒழிப்பு’ என்ற கொள்கையை எவ்வளவு மோசமாக திராவிட இயக்கத் தலைவர் ஈ.வே.ரா. என்ற பெரியார் நடந்து கொண்டார் என்பதை இந்தப் பதிவிவைப் படிப்பவர்கள் உணர்வார்கள். திராவிட இயக்கம் தமிழ் நாட்டை இந்தியாவுடன் பிரித்து இயங்கவும், ஆங்கிலேயர்களுக்குத் துதிபாடியும் சுதந்திர இயக்கத்தின் ஐந்தாம் படையாக துரோகம் செய்தார்கள் என்பதையும் அவர்களின் ‘வெறுப்பு ஜாதி அரசியலால்’ வெளிச்சத்திற்கு வராமல் மக்களை ஏமாற்றினார்கள் என்பது ஒரு ஆணித்தரமான சரித்திர உண்மையாகும். பெருமாள் இஸம் – பெரியாழ்வார் இஸம் – என்ற பக்தி மார்க்கத்தையும், தமிழ் மொழியை வளர்த்த பலரின் உன்னதமான தமிழ்ச் சேவைகள் புறக்கணிக்கப்பட்டு, ‘தமிழ் காட்டுமிராண்டி மொழி’ என்று தமிழுக்குப் பட்டம் சூட்டிய பெரியாரிசம் என்று தமிழ் நாட்டிலிருந்து ஒழிக்கப்படுகிறதோ அப்போது தான் தமிழ் நாடும் – தமிழும் நேர்படும். மக்கள் இப்போது விழித்துக் கொண்டு விட்டார்கள். தமிழும் – தமிழ் நாடும் இனி தன் இனிய பயணத்தைத் தொடரும் வாய்ப்புகள் அதிகம் ஏற்பட்டுள்ளன. வீழ்க பெரியாரிசம். வீழ்க நாத்திகம். வீழ்க த...