பாரத இந்து மக்களே! உஷார்! உஷார்!! உஷார்!!! ஆக்கம்: பவித்திரன்
பாரத இந்து மக்களே! உஷார்! உஷார்!! உஷார்!!! ஆக்கம்: பவித்திரன் காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் – திருணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆட்சியைப் பிடிக்க எந்தவிதமான காரியத்தையும் செய்யத் துணிந்து விட்டதாகவே படுகிறது. காங்கிரஸ் கட்சி பி.ஜே.பி. தேர்தலில் வெற்றி பெறக்கூடாது என்பதற்காகவே அது ஆட்சியில் இருந்த போதே, ஹிந்து தீவிர வாதம் தலை தூக்கி விட்டது. அதற்கு பி.ஜே.பி.தான் காரணம் என்று பகிரங்கமாகவே அறிக்கை வெளியிட்டார்கள். அதுவும் அப்போதைய காங்கிரஸ் உள்துறை அமைச்சர்களே குற்றம் சாட்டி உள்ளார்கள். அதற்குக் காரணம் ‘இந்துக்கள் எப்படியும் காங்கிரசை கைவிட மாட்டார்கள். முஸ்லீம்களின் ஓட்டுக்களைப் பெற இந்து தீவிரவாத அறிக்கை உதவும்’ என்று அனுமானித்தார்கள். ஆனால், இந்துக்கள் காங்கிரசை நம்மவில்லை. காங்கிரசை ‘44’ லோக்சபா உறுப்பினர்களாக தோற்கடித்து, அதற்கு எதிர்கட்சி அந்தஸ்தையும் கிடைக்காமல் செய்து சரித்திரம் படைத்தார்கள். மோடியின் தலைமையில் மத்தியில் ஆட்சியை ஜனநாயகக் கூட்டணி அமைத்தது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான மணி சங்கர் ஐயர் – திக்விஜய் சிங் ஆகியவர்கள் மிகவும் ஆணித்தரமாக பாகிஸ்தான் அரச...