Posts

Showing posts with the label எதிர்ப்பதும்

எதிர்ப்பதும், எதிர் கொள்வதும்

Image
எதிர்ப்பதும், எதிர் கொள்வதும் நமது வாழ்வில் நாம் இரண்டு விதமான மன நிலையில் அநேக நேரங்களில் இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டு. அவைகளை எதிர்க்கும் மன நிலை (Reaction Mode) என்றும், எதிர்கொள்ளும் மன நிலை (Responsive Mode) என்றும் குறிப்பிடலாம். அந்த இரண்டு மன நிலைகளைப் பற்றி விவரிப்பது தான் இக் கட்டுரையின் நோக்கம். எதிர்க்கும் மன நிலை: முதலில் எதிர்க்கும் மன நிலையைப் பார்ப்போம். இந்த நிலையில் மனத்தில் அழுத்தம் உண்டாவதை மனிதர்கள் உணர்வார்கள். இதில் ஒருவர் கட்டாயத்தின் பளுவின் சக்தியால் தாக்கப்பட்டு, ஒரு தவறான அவசர முடிவுக்கு வரவேண்டிய நிலை ஏற்படும். இதில் எடுக்கும் முடிவில் ஒரு விஷயத்தில் அடங்கி உள்ள அனைத்து விவரங்களையும் அறிந்து, ஒரு தெளிவான பார்வையைப் பெற நாம் தவறி விடுகிறோம். தனிப்பட்ட விருப்பு-வெறுப்புகளுக்கு ஆளாகி, அவசரப்பட்டு முடிவெடுக்கும் நிலை உண்டாகிறது.  அதனால், நாம் கோபப்பட்டும், கவலைப் பட்டும், வெறுப்படைந்தும் ஆகிய மன நிலையால் துன்பப்பட்டுத் தவிக்க வேண்டி வரும். நாம் எதிர்க்கும் மன நிலையில் இருக்கும் போது, நமது தேர்வு மற்றும் முடிவெடுக்கும் திறன்கள் த...