Posts

Showing posts with the label உயிர்மூச்சு உயர்ந்தது

உயிர்மூச்சு உயர்ந்தது

உயிர்மூச்சு உயர்ந்தது குறிப்பு: நமது உபநிடத்தில் பல உயர்ந்த கருத்துக்களைப் புரிய வைப்பதற்கு பலவிதமான சம்பவக் கதைகளையும், உருவகக் கதைகளையும் ஆங்காங்கே பரவலாகச் சொல்லி இருக்கிறார்கள். அவைகளை என் பாணியில் சுவை குன்றாது உங்களுக்குத் தொடர்ந்து அளிக்க முன் வந்துள்ளேன். உபநிடதக் கருத்தை முக்கிய கருவாகக் கொண்டு நான் எழுத விழைவதால், இது உபநிடத்தை ஒட்டியதாக இருந்தாலும், விளக்கம் குறித்துச் சில பல அதில் இல்லாத ஆனால் பொருத்தமான கருத்துக்களையும் சொல்ல விழைகிறேன். சுவையுடன், சுலபமாகப் புரியும் தன்மையுள்ளதாக இருக்க வேண்டும் என்பது தான் என் குறிக்கோள். உடம்பில் உள்ள உறுப்புக்களில் உயிர் மூச்சுதான் புராதனமானதும், மிகச் சிறந்ததுமாகும். ஆனால், பேசும் தன்மை கொண்ட வாயுவும் மிகச் சிறந்தது தான். தீர்க்கமான பார்வைகொண்ட கண்களும் சிறந்தது தான். கேட்கும் திறன் கொண்ட காதுகளும் சிறந்த செல்வத்தைப் போல் ஆகும். நினைக்கும் திறன் கொண்ட மனது 'தான் தான் எல்லோருக்கும் வழிகாட்டும் குரு' என்று நினைத்து, தான் தான் சிறந்த மனிதனின் உறுப்பு என்றது. உடம்பிலுள்ள வாய், கண்கள், காதுகள், மனம், உயிர் மூச்சு இவைகள்...