Posts

Showing posts from 2026

ஜூலை 6 முதல் 11, 2026 வரை மோடியின் இந்தோனேஷியா – ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அரசுப் பயணம்

Image
  ஜூலை 6 முதல் 11, 2026 வரை மோடியின் இந்தோனேஷியா – ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அரசுப் பயணம் - இந்தோ-பசிபிக்  பிராந்தியத்தில் இந்தியாவின் புதிய இராஜதந்திர எழுச்சி பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இந்தோனேஷியா , ஆஸ்திரேலியா , நியூசிலாந்து ஆகிய மூன்று முக்கிய இந்தோ-பசிபிக் நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். இது ஒரு சாதாரண வெளிநாட்டுப் பயணம் அல்ல. இந்தியாவின் Act East Policy, MAHASAGAR (Mutual and Holistic Advancement for Security and Growth Across Regions) என்ற கடல்சார் பார்வை , சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் ( Free and Open Indo-Pacific) கொள்கை ஆகியவற்றை நடைமுறைப்படுத்தும் முக்கியமான இராஜதந்திரப் பயணமாக இது அமைந்தது. 1.        2026 ஜூலை 6 முதல் 8 வரை மோடியின் இந்தோனேசியா பயணம் இந்தோனேசியா என்பது 17 , 508 தீவுகளைக் கொண்ட உலகின் மிகப்பெரிய தீவுக்கூட்ட நாடாகும். இது தென்கிழக்கு ஆசியாவில் , இந்தியப் பெருங்கடலுக்கும் பசிபிக் பெருங்கட...