Posts

Showing posts with the label விமரிசகர்

திண்ணைக் கச்சேரி பங்குபெறுவோர்: வாசகர், விமரிசகர், நிருபர், பொதுஜனம்

Image
திண்ணைக் கச்சேரி பங்குபெறுவோர்: வாசகர், விமரிசகர், நிருபர், பொதுஜனம் நிருபர்: ராஹுல் இப்போது கனவு உலகத்தில் சஞ்சரிக்க ஆரம்பித்து விட்டார் என்றே தோன்றுகிறது. அதுவும் குஜராத்திற்குச் சென்றாலே அவரது கனவு விண்ணுலகத்தில் சஞ்சரிக்க அவரது பேச்சும் அதை ஒட்டியே ஓடுகிறது. சமீபத்தில் குஜராத்தில் ஒரு கூட்டத்தில் பேசுகிறார். ஹிந்தியில் பேசினார். அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இதன் வீடியோவைப் பார்த்து ஊர்ஜிதம் செய்த பிறகு தான் இதை எழுதுகிறேன். ஆகையால் இதன் உண்மைத் தன்மையை ஒருவரும் சந்தேகிக்க வேண்டாம். ‘குஜராத்தில் உள்ள உங்கள் நிலத்தினால் எந்தவிதமான பிரயோசனமும் இல்லை. நான் சந்திரனில் இயந்திரங்களை உழ அனுப்பி வைப்பேன். அங்கு நீங்கள் சந்திரனில் உருளைக்கிழங்கு பயிர் செய்யலாம். நீங்கள் அங்கு பயிர் செய்த உருளைக்கிழக்கை குஜராத்தில் விற்பனை செய்வதற்கு நான் உதவி செய்வேன்.’ என்பது தான் ராஹுலின் பேச்சு. வாசகர்: இது பட்ரோடா குருவின் தாக்கமாக இருக்கலாம். அந்த மா மேதை சமீபத்தில் சொன்னார்: ‘தேர்தல் ஓட்டு இயந்திரம் ஒன்றை என்னிடம் ஒரு வருடம் கொடுங்கள். அதை நான் ஆராய்ந்து அதில் உள்ள குறைகளைக் கண...

ரஃபேல் - திண்ணைக் கச்சேரி பங்குபெறுவோர்: வாசகர், விமரிசகர், நிருபர், பொதுஜனம்

Image
வாசகர்: ரஃவேல் போர் விமானம் வாங்க முந்தைய அரசு பேசிப் பேசியே நாட்களைக் கடத்தியது. பத்து ஆண்டுகளாக எந்த உடன்படிக்கையும் செய்ய வில்லை. விமானம் வாங்க எங்கே இருக்கிறது பணம்? – என்று அப்போதைய மந்திரி ஏ.கே.அந்தோனி வெளிப்படையாகவே ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். ஆனால், மோடி 36 போர் விமானங்கள் – இடைத்தரகர்கள் இன்றி – இன்றைய கால கட்டத்தில் உள்ள அனைத்து திறனும் கொண்ட புதிய டெக்னாலஜியுடன் கூடிய விமானங்கள் – வாங்க முடிவெடுத்து வெற்றி கண்டுள்ளார். இந்த துரித நடவடிக்கையிலும் விமானங்கள் இந்த வருடம் செப்டம்பரிலிருந்து தான் இந்தியாவிற்கு வர இருக்கிறது. இது ஏதோ கடைக்குப் போய் ஒரு பொருள் வாங்குவது போல் இல்லை. அடிப்படை விமானம் ஒரு விலை – அதில் இந்தியாவின் குறிப்பிட்ட அதிநவீன அம்சங்கள் (India Specific Enhancement) சேர்த்து ஒரு விலை என்று ஒப்பந்தம் செய்த பிறகு தான் அதற்கு ஏற்ப தயார் செய்யப்படும். இதற்கு கால அவகாசம் ஆகும். அந்த கால கட்டத்தில் சில புதிய கண்டுபிடிப்புகள் சந்தைக்கு வந்தால் அதற்கான விலையையும் கொடுத்து, அதையும் சேர்க்க வைப்பது தான் நாட்டு நலனில் அக்கரை கொண்ட தலைவர்களின் கடமையாகும். ஏனென்றால்...

பங்குபெறுவோர்: வாசகர், விமரிசகர், நிருபர், பொதுஜனம்

Image
முன் குறிப்பு: இந்திய அரசியல் சட்டம் ஆர்டிகிள் 370 மூலம் ஜம்மூ – காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தாலும், அதற்கு தனி தன்னாட்சி சிறப்பு அந்தஸ்து நிலையை இந்த ஆர்டிகிள் 370 உண்டாக்கியது. இந்த ஷரத்து இந்திய அரசியல் சாசனம் பகுதி 21-ல் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த 370 ஷரத்து தற்காலிகமானது, இடைக்கால ஏற்பாடு, சிறப்பு அஸ்தஸ்து என்று குறிப்பிட்டிருந்தாலும், ஜம்மூ-காஷ்மீர் அரசியல் சட்டசபை இந்த 370-யை ரத்து செய்யப் பரித்துரைக்காமல் கலைக்கப்பட்ட நிலையில் அதுவே நிரந்தரமான சட்டமாகி விட்டது. தனி அந்தஸ்து என்றால் ஜம்மூ – காஷ்மீருக்கு தனியான அரசியல் சாசன சட்டம், தனிக் கொடி, இந்திய அரசியல் சட்டத்திலிருந்து விலக்கு, மத்திய அரசு பாதுகாப்பு, அயல்நாட்டு உறவுகள், தகவல் தொடர்புகள் ஆகியவைகளில் மட்டும் சட்டம் இயற்றும் அதிகாரம், மற்ற சட்டங்கள் மாநில அரசின் ஒப்புதல் பெற்று செயல்படுத்தல், அர்டிகிள் 370-யை ரத்து செய்வது அல்லது சட்ட திருத்தம் செய்ய ஜம்மூ-காஷ்மீர் அரசியல் சாதன சட்டசபையின் ஒப்புதல் பெற்றபின் செயல்படுத்தும் நிலை – ஆகியவைகள் அடக்கம். ஜம்மூ-காஷ்மீர் அரசியல் சாசன சட்டசபை 31-10-1951 அன்று உருவாக்கப்பட்டு,...