2579-வது கவுதம புத்தரின் வருடப் பிறந்த நாள் – 10-05-2017
புத்தர் (563-483 கி.மு.) நேபாலில் உள்ள லும்பினியில் வைகாசி மாதம் பவுர்ணமி நாளில் பிறந்து, புத்தகயாவில் ஞானோதயம் பெற்று, மத்தியப் பிரதேச சாரநாத்தில் தமது 8 அம்ச தர்மத்தை முதன் முதலாக உபதேசம் செய்து, உத்திரப் பிரதேச குஷிநகரில் தமது 80-வது வயதில் முக்தி அடைந்தார். புத்த ஜெயந்தி, விசாக், வைசாகா – என்று பல பெயர்களில் புத்தரின் விழா கொண்டாடப்படுகிறது. புத்தர் பிறந்த தினம், புத்தர் ஞானம் பெற்ற தினம், புத்தர் முத்தி அடைந்த தினம் எல்லாம் இந்த வைகாசி மாத பூர்ண சந்திரன் ஒளி விடும் ஒரே நாள் என்பது ஒரு பெரிய ஆச்சரியமான செய்தி. புத்தர் என்றால் ‘உத்தம புருஷர்’ என்றே பொருளாகும். புத்தரின் முக்கிய போதனை ‘நான்கு புனிதமான உண்மைகள்’ என்பதில் அடக்கம். துக்கம், துக்கத்தின் மூலம், துக்க நிவர்த்தி, துக்க நிவர்த்திப் பாதை – ஆகியவைகள் தான் அந்த நான்கு புனித உண்மைகளாகும். முதல் உண்மை மனித வாழ்க்கையின் பிரச்சனைக்கு காரணம் – துக்கம் என்றும், இரண்டாவது உண்மையில் துகத்திற்கான காரணங்களை அறிய வேண்டும் என்றும் போ...