1935-ம் வருடத்தில் காந்திஜிக்கு சுதேசி பேனா அன்பளிப்புத் தகவல்
1921-ம் ஆண்டு, ராஜமந்திரியைச் சேர்ந்த கே.வி.ரத்னம் என்ற அன்பர் காந்திஜியை வார்தாவில் சந்தித்து ஒரு உருக்கிய உலோகம் ஒன்றை அன்பளிப்பாக அளித்தார். அதைப் பெற்றுக் கொண்ட காந்திஜி ரத்தினத்திடம் ‘நீங்கள் ‘PIN TO PEN’ என்ற கொள்கைப்படி விதேசிப் பொருள்களை பகிஷ்கரிக்கும் விதமாக சுதேசிப் பொருள்களை உருவாக்குங்கள்’ என்று அறிவுறித்தினார். அப்போதோ அன்னிய பொருட்களை தீயிட்டுக் கொளுத்தும் போராட்டம் மும்முரமாக நடைபெற்ற நேரம். 1932-ம் ஆண்டு தானே கையால் உருவாக்கிய பேனா ஒன்றை காந்திஜிக்கு அனுப்பினார். ஆனால், காந்திஜி அந்தப் பேனாவை ‘இந்தப் பேனாவில் அன்னிய பொருட்கள் உள்ளன. ஆகையால், அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது’ என்று நிராகரித்து விட்டார். ஆகையால், இதையே ஒரு சவாலாக ஏற்று, ஒரு வருடம் போராடி, ஒரு முழுவதுமான சுதேசிப் பேனாவை உருவாக்கி வெற்றி கண்டார் ரத்தினம். 1933-ம் வருடம் அகில இந்திய கிராம தொழில் கழகத்தின் செயலாராக இருந்த ஜே.சி.குமரப்பா ராஜமந்திரிக்கு விஜயம் செய்தார். அவரிடம் தாம் உருவாக்கிய அந்த ‘சுதேசிப் பேனா’வை காந்திஜியிடம் கொடுக்கும்படி குமரப்பாவிடம் கேட்டுக் கொண்டார். அந்தப் பேனாவைப் பெற்றுக்...