அயோத்தியில் ராமர் கோயில் கட்ட சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கித் தீர்ப்பு
அயோத்தி ராம ஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்ட சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கித் தீர்ப்பு 09-11-2019 – ஹிந்துக்களுக்கு ஒரு புனித நாளாகும் . பெர்லின் சுவர் இடிக்கப்பட்டு , கிழக்கு – மேற்கு ஜெர்மனியர்கள் இருவரும் இணைந்த நாளாகும் இது . அதே போல் இந்து – முஸ்லீம்கள் தங்கள் விருப்பு - வெறுப்புகளை மறந்து ஒன்று பட்டு , இந்தியர்களாகத் தங்களை இனம் கண்டு புதிய இந்தியா உருவாக முனையும் உன்னத நாளாகவும் இது இனி வரும் நாட்களில் நிரந்தரமாக நிதர்சனமாக நிகழ ஈஸ்வரன் – அல்லா ஆண்டவர்களை வேண்டுவோமாக . கடந்த சுமார் 200 வருடங்களுக்கும் – முஸ்லீம் படையெடுப்பின் போது ராமர் ஜென்ம பூமியில் கட்டப்பட்ட ராமர் கோயிலை இடித்து பாபர் மசூதி கட்டிய 1828 ஆண்டிலிருந்தே ஹிந்துக்கள் அயோத்தியில் பாபர் மசூதியை இடித்தோ அல்லது வேறு இடத்திற்குப் பெயர்த்தோ ராமருக்கு முன்பு இருந்த கோயிலைப் போல் அதே இடத்தில் கட்ட வேண்டும் என்று ஹிந்துக்கள் தொடர்ந்து போராடி வந்துள்ளனர் . அந்த இடம் ராமர் பிறந்த புண்ணிய பூமி . அது ராமரைத் தெ...