ஆவணியா அவிட்டம் என்ற உபாகர்மா - 19 - 08 - 2024 - திங்கட் கிழமை
ஆவணியா அவிட்டம் என்ற பூணூல் மாற்றும் கர்மா பிராமணர்களுக்கு உரித்த ஒரு சடங்காகும். இது சனாதன தர்மத்தைக் காக்கும் கடமையைச் செய்ய பணிக்கப்பட்ட பிராமணர்கள் அனுஷ்டிக்க வேண்டிய ஒரு முக்கியமான கர்மாவாகும். பிராமணர்களுக்கு அடையாளமான குடுமி போய்விட்டது. பூணூல் வெளிநாடுகளுக்கு மேல் படிப்பு, வேலை ஆகியவைகளுக்காகச் செல்லும் பிராமணர்கள் பூணூலை அப்பா - அம்மாவிடம் ஒப்படைத்து விட்டுச் சென்று விடுகிறார்கள். நெற்றியில் விபூதி, கோபிச் சந்தனம், நாமம் - ஆகியவைகள் காணாமல் போய்விட்டன. படிப்பு, பதவி, பணம், பகட்டு ஆகியவைகளில் பிராமணர்கள் ஆசை கொள்ளக் கூடாது என்பது சாஸ்திரம். அவர்கள் சனாதன தர்மத்தைக் காக்க தங்களை அர்ப்பணித்து ஒரு நித்திய தியாக வாழ்க்கையை அனுசரிக்க வேண்டும் என்பது பிராமணர்களுக்கான விதி. ஹிந்து மதத்தைக் காக்க இந்த எளிய வாழ்க்கை தான் அவர்களுக்கு இடப்பட்ட வழிமுறையாகும். ஆனால் அதிலிருந்து அனேகமாக பல பிராமணர்கள் குடும்பம் குடும்பமாக விடுபட்டு, சனாதன தர்மத்தைக் கடைப்பிடிக்காமல் தவறிழைத்துத்துக் கொண்டிருக்கிறார்கள். பிராமணப் பெண்களால் தங்கள் நீண்ட தலைமுடி, பின்னல், நெற்றியில் ...