செப்டம்பர் 10, 2019 – இந்திய சரித்திரத்தில் நிகழ்ந்த அதிசயம்
செப்டம்பர் 10, 2019 – இந்திய சரித்திரத்தில் நிகழ்ந்த அதிசயம் ஜஸ்டின் வெல்பி என்பவர் காண்டர்பரியின் ஆர்ச் பிஷப். அவர் செப்டம்பர் 10-ம் தேதி அமிர்தசரத்தில் உள்ள ஜாலியன் வாலா பாக்கிற்கு வருகை தந்தார். அந்த வளாகத்திற்கு உள்ளே வந்த கிருஸ்துவர்களுக்கு தலைமைப் பொறுப்பில் உள்ள பிஷப், யாரும் எதிர்பார்க்காத நிலையில் சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து, அங்கு 100 வருடங்களுக்கு மேல் நிகழ்ந்த ஜெனரல் டையரின் குண்டுகளுக்கு பலியான நூற்றுக்கணக்கான அப்பாவி பஞ்சாப் மக்களுக்காக மன்னிப்புக் கோரிப் பிரார்த்தனை செய்துள்ளார். ஆர்ச் பிஷப் அப்போது உருக்கமாக உரை ஆற்றி உள்ளார்: “நான் இங்கு நடந்த துப்பாக்கிச் சூட்டிற்கு தனிப்பட்ட முறையில் மிகவும் வருந்துகிறேன். இங்கிலாந்து ராஜ்யம், அதன் அரசாங்கம் அல்லது அதன் சரித்திரம் ஆகியவைகளை முன்னிறுத்தி மன்னிப்புக் கேட்கும் தகுதியை நான் பெற்றிருக்கவில்லை. ஆனால், இந்த கொடுமையான பயங்கரமான செய்கைக்கு நான் என் தனிப்பட்ட முறையில் மிகவும் வருந்துகிறேன். நான் எனது தேசத்திற்காகப் பேசவில்லை. ஆனால், நான் சார்ந்த ஆங்கிலிக...