சஞ்சீவ் பட்டின் நேர்மையின்மை
சஞ்சீவ் பட்டின் நேர்மையின்மை 2002 குஜராத் கலவரத்தை பெரிசு படுத்தி , இங்குள்ள பெரிய புள்ளிகள் , அரசியல்வாதிகள் , அரசு சாரா அமைப்புகள் , பல முஸ்லீம் கட்சிகள் , காங்கிரஸ் - இடது சாரி கட்சிகள் , பல உலக அமைப்புகள் ஆகியவைகள் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக மோடியை ஒரே அடியாக வீழ்த்த திட்டம் தீட்டி - உள் நாட்டிலும் - வெளிநாட்டிலும் பணப் பிரயோகம் - பதவி அதிகாரம் - துஷ்பிரசாரம் - போலீஸ் வழக்குள் - நீதி மன்ற வழக்குள் - அயல் நாட்டில் அவதூறுப் பிரசாரங்கள் , யு . எஸ் . விசா மறுப்பு - என்று பல முனைகளிலும் தாக்கி அவர்கள் அனைவரும் தரம் தாழ்ந்து , வீழ்ந்து , தோற்றனர் . அதற்குக் காரணம் மோடி தமது நேர்மை , தைர்யம் , தன்னம்பிக்கை ஆகியவைகளுடன் போலியான மதச் சார்பின்மையைப் புறம் தள்ளி மக்களின் நன்மதிப்பைப் பெற்றதாகும் . 2002 குஜராத் கலவரத்திற்கு மூல காரணமான கோத்ரா ரயில் பெட்டியை சுமார் 2000 பேர்கள் கொண்ட கும்பல் சூழ்ந்து கொண்டு கற்களை எரிந்து தீயிட்டதினால் ரயில் பெட்டிகள் இரண்டு எரிந்து , அதில் இருந்த 59 இந்து கரசேவகர்கள் - அதில்...