04 – 11 2023 - இன்றைய இனிய சிந்தனை
சுதந்திரம் என்பது மனிதனுக்கு மிகவும் அவசியமான ஒன்று. மனிதன் சுவாசம் போன்று மனிதனுக்கு கூடவே அந்த சுதந்திரம் ஒரு கவச அங்கியாக இருக்க வேண்டும். உலக சரித்திரத்தை அலசிப் பார்க்கும் போது மனிதன் இன்னொரு மனிதனின் சுதந்திரத்தைப் பறித்து அவனை அடிமையாக்கி அதன் மூலம் ஒரு பெரும் அடிமைக் கூட்டத்தை உருவாக்கி தன்னை ஒரு பெரும் தலைவனாக அனைவரையும் ஏற்க வைத்து ஒரு பெரிய அரச பரம்பரையை உருவாக்கி கோலோட்சும் நிலை உருவாகி விடுகிறது. இதன் மூலம் மனிதர்களை மிருகங்கள் போல் சந்தைகளில் அடிமைகளாக விற்பதும் – வாங்குவதும் பல நாடுகளில் நடை முறையில் இருந்துள்ளன. அப்படி அடிமைகளாக வாங்குபவர்களை தங்கள் அரண்மனைகளில் சேவகர்களாக வேலை வாங்கினார்கள். அது மட்டுமல்ல. அந்த அடிமைகளை வேடிக்கைப் பொருளாகவும் ஆக்கி அவர்களை விளையாட்டு அரங்கில் நடைபெற வைத்து மனம் மகிந்தனர் அந்த அரச வம்சத்தினர். உள்ளத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் கொடூர மிருக குணங்களை எழிப்பி அசுரர்களாக உருவெடுத்து அந்தக் கேளிக்கைகளில் சுகம் கண்டவர்கள். இதற்காகவே பெரிய விளையாட்டு மைதானங்களைக் கட்டினார்கள். பசியோடு பல நாட்கள் சிங்கங்களை கூண்டில் அடைத்து வைத்து, பிறக...